பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பஞ்சம் இல்லாத முடிச்சூர்

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
தாம்பரம்: சென்னைவாசிகள், ஒரு குடம் தண்ணீருக்கு, தவியாய் தவிக்கும் நிலையில், சென்னை புறநகரில் உள்ள முடிச்சூர் ஊராட்சியில், இவ்வளவு வறட்சியிலும், தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு, ஊராட்சி நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்களுடன் இணைந்து, நீர்நிலைகளை துார்வாரி பராமரித்ததே காரணம்.தமிழகத்தில், கடந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு
 தண்ணீர் பஞ்சம் இல்லாத முடிச்சூர்

தாம்பரம்: சென்னைவாசிகள், ஒரு குடம் தண்ணீருக்கு, தவியாய் தவிக்கும் நிலையில், சென்னை புறநகரில் உள்ள முடிச்சூர் ஊராட்சியில், இவ்வளவு வறட்சியிலும், தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு, ஊராட்சி நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்களுடன் இணைந்து, நீர்நிலைகளை துார்வாரி பராமரித்ததே காரணம்.

தமிழகத்தில், கடந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், கடுமையான வறட்சி நிலவுகிறது.மறுமலர்ச்சி திட்டம்பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தண்ணீர் இன்றி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.குடிநீருக்காக, மக்கள் காலிக் குடங்களுடன் அலையும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.ஆனால், சென்னை புறநகரில், தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் ஊராட்சியில், நிலைமை தலைகீழாக உள்ளது.இவ்வளவு வறட்சியிலும், இந்த ஊராட்சியில் மட்டும், 50 சதவீதம் பகுதிகளுக்கு, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மீத பகுதிகளுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. பருவமழை பொய்த்த போதும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, முந்தைய ஆண்டுகளில், ஊராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை பராமரித்தது தான் காரணம்.இந்த ஊராட்சியில் வசிக்கும், 27 ஆயிரம் பேருக்கு, தினசரி குடிநீர் தேவையாக, 14.57 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது.தற்போது, நாளொன்றுக்கு, 14.17 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. இது, எந்தளவிற்கு சாத்தியமானது என, கேள்வி எழுப்பியபோது, அது குறித்து, ஊராட்சியின் முன்னாள் தலைவர், டி.தாமோதரன் கூறியதாவது:ஊராட்சியின் நீராதாரங்களில் ஒன்றான கிணறுகளை, 1996ம் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வீதம், முறையாக துார்வாரி ஆழப்படுத்தினோம்.அதேபோல், 2014 -- 15ல் சிறிய குளம், 2015 -- 16ல் லட்சுமி நகர் குளம், 2016 -- 17ம் ஆண்டில், ரங்கா நகர் குளம், 2018 -- 19ம் ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பெரிய குளம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், துலுக்கானத்தம்மன் கோவில் குளம் என, அடுத்தடுத்த ஆண்டுகளில், குளங்கள் துார்வாரப்பட்டன.வட கிழக்கு பருவமழை பொய்த்ததால், குடிநீர் தேவையை உணர்ந்த ஊராட்சி நிர்வாகம், 2017 -- 18ல் மட்டும், மூன்று கிணறுகளை துார்வாரியது. அதனால், மொத்தம் உள்ள, 18 கிணறுகளிலும் ஓரளவு நீர் தேங்கி உள்ளது.எதிர்கால தேவைமேலும், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு இடங்களில், புதிதாக ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும், கிணறுகள், 6 - 10 அடி வரையும், குளங்கள், 2 - 3 அடி வரையும் துார் எடுக்கப்பட்டன.கிணறுகள், குளங்களை தொடர்ந்து, முக்கிய நீராதாரமான, பெரிய ஏரியும், மக்களின் கோரிக்கையை அடுத்து, 2014 - 15ம் ஆண்டில், பொதுப்பணித்துறையால், 8 அடி வரை துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது. அதனால், இன்று வரை, ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.அதேநேரம், ஆக்கிரமிப்புகள் இருந்ததால், மற்றொறு நீராதாரமான, சீக்கனா ஏரி மட்டும் துார்வாரப்படவில்லை.எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, குடிநீரை தேக்கி வைக்க கட்டப்பட்ட, 18 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. இதனால், வார்டு வாரியாக, தடையின்றி துரிதமாக, குடிநீர் வழங்க முடிகிறது.நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பெய்யும் மழைநீர், வடிகால்கள் வாயிலாக, ஊராட்சியில் உள்ள குளங்களுக்கு செல்லும் வகையில், தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.இதனால், மழை பொய்த்துள்ள போதும், ஊராட்சிக்குட்பட்ட, 2, 5, 6, 7, 10, 11 ஆகிய வார்டுகளில், தினசரியும், மற்ற வார்டுகளில், ஒரு நாள் விட்டு ஒரு நாளும், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.பொதுமக்களும், குடிநீருக்காக அவதியுறும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சக்தி - chennai,இந்தியா
26-ஜூன்-201912:42:12 IST Report Abuse
சக்தி இந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டா குறைந்து போகிருமா ??
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஜூன்-201904:02:12 IST Report Abuse
meenakshisundaram துரை தலைமையில் ஒரு திமுக அணியை முடிச்சூருக்கு உடன் அனுப்பவும் ,அந்த தண்ணீரை அரசாங்கம் சென்னைக்கு 'கடத்தி 'விடுவதை தடுக்க ,இனப்போராளிகள் ஒன்று சேரட்டும்.-ஆனா காவிரி தண்ணி மாத்திரம் கர்நாடகாக்காரன் தரணும்?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
22-ஜூன்-201904:56:04 IST Report Abuse
jagan அட போச்சு...இப்போ எல்லா லாரிகளும் இங்கிருந்து தண்ணீர் திருட போகும்.... இதை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X