பொது செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ் இன்று டில்லி பயணம்

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஓபிஎஸ் இன்று டில்லி பயணம்

சென்னை: நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று(ஜூன் 20) டில்லி செல்கிறார்.

முதல்வர், இ.பி.எஸ்., சமீபத்தில், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க, டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கோவையில், இயற்கை வைத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇருந்தார். சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பியுள்ள அவர், இன்று இரவு, டில்லி செல்கிறார்.

டில்லியில், நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், இக்கூட்டம் நடப்பது வழக்கம். மத்திய நிதி அமைச்சராக, நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின், முதல் கூட்டம், நாளை நடக்கிறது. இதில் துணை முதல்வர் பங்கேற்று, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, வலியுறுத்த உள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்பதுடன், மத்திய அமைச்சர்களை சந்திக்கவும், பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-ஜூன்-201911:52:59 IST Report Abuse
தமிழ் மைந்தன் அவரு திமுக போல ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாத்துங்கோ என்றும் எங்க கம்பெனி சொத்தை அரசுடமையாக்கி விடாதீங்க என்றும் கேட்க அவர் என்ன ஊழல்திமுக கம்பெனி இயக்குநரா?...இல்லை கம்பெனி பொருளாளரா?....
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
20-ஜூன்-201914:06:29 IST Report Abuse
selvamஆமாங்க அவர் தமிழ் மக்களுக்கு தர்மம் யுத்தம் தியானம் போன்றவற்றை கற்று கொடுத்த மகான் ......
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜூன்-201910:28:17 IST Report Abuse
Pugazh V தமிழக தண்ணீர் பிரச்சினை பற்றி பேசுவாரா அல்லது இது நிகழ்ச்சி நிரலில் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X