மும்பை: லோக்சபா தேர்தலின் போது, ஊடகங்களில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான தேர்தல் செய்திகளில் 40 சதவீதம் ஒருதலைபட்சமானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில், லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஏப்., மே மாதங்களில் நடந்தன. அப்போது ஊடகங்களில் வெளியான செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து, பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்., மாதம் பல்வேறு ஊடகங்களில் வெளியான 1.68 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் செய்திகளில், 40 சதவீத செய்திகள் ஒருதலைபட்சமாக வெளியிடப்பட்டுள்ளது. செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து 9.5 லட்சம் செய்திகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 33 ஆயிரம் செய்திகள் போலியானவை என தெரியவருகிறது. மேலும் தேர்தல் செய்திகளில் 85 சதவீதம் உண்மைத்தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE