சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வால்வோவின் தானோட்டி லாரி!

Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வால்வோவின் தானோட்டி லாரி!

அட, ஓட்டுனரே இல்லை, பின் எதற்கு ஓட்டுனர் இருக்கையும், அறையும்? எனவே, அதை துாக்கிவிட்டது வால்வோ. கடந்த செப்டம்பரில் தானோட்டி சரக்குந்துகளை அறிமுகப்படுத்திய ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ, அண்மையில், 'வெரா' என பெயரிட்ட ஓட்டுனரில்லா லாரியை சாலையில் ஓடவிட்டது.

ஏற்கனவே சக்திவாய்ந்த மின்சார லாரிகளை அறிமுகப்படுத்தியுள்ள வால்வோ, இப்போது தானோட்டி லாரிகளையும் தயாரிக்கிறது.

தனியே பார்க்க ஆடம்பர கார் போல தெரிந்தாலும், நான்கு சக்கரம் கொண்ட 'வெரா'வை, சரக்குப் பெட்டியுடன் இணைத்தால் தானாகக் கிளம்பி, சரக்கை உரிய இடத்திற்கு பத்திரமாக ஓட்டிச்செல்கிறது வெரா.

அடுத்த பத்தாண்டுகளில், தானோட்டி லாரிகள் ஒன்றோடு ஒன்று, தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றுவிடும் என்பதால், சாலைகளில் சாரிசாரியாக வெரா தானோட்டி சரக்குந்துகள், விரைவாக சரக்குகளை கொண்டு செல்ல முடியும் என வால்வோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28-ஜூன்-201903:33:57 IST Report Abuse
 nicolethomson இதுதான் கரணம் என்று சிலர் போராட்டம் நடத்த கிளம்பி விடுவார்களே ? ஆனா நம்மூருக்கு இந்த வண்டியெல்லாம் பயன்படாது , iruஒருவழி பாதை என்று இருந்தாலும் நாங்க லோக்கல் இப்படி தான் போவோம் என்று செல்லும் மக்களை கொண்ட நாடு இது , இந்த லாரி அப்படியே விழி பிதுங்கி நிற்கும் , பின்னால் கன்டைனரில் இருக்கும் சரக்கை எவனாவது ஆட்டைய போட்டிருப்பான்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
20-ஜூன்-201920:04:09 IST Report Abuse
Gopi முடிந்தது லாரி ஓட்டுனர்களின் ஜோலி
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
21-ஜூன்-201919:29:11 IST Report Abuse
பஞ்ச்மணிஉடனே ஒரு 50 வருசத்துக்கு அப்பாலே கனவு காண வேண்டியது இது எவ்வளவு நடைமுறை சாத்தியம் அதை பத்தி எல்லாம் யோசிக்கறது கிடையாது இதே நம்ப ஊருலே இதையே காரமா வெச்சு போராட்டம் ஆரம்பிச்சுப்பாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X