எம்.பி.,க்களே யோகா செய்யுங்க., இல்லைன்னா., பாபா சாபம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எம்.பி.,க்களே யோகா செய்யுங்க., இல்லைன்னா., பாபா சாபம்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (13)
Share

மும்பை: எம்.பி.,க்கள் ,எம்எல்ஏ.,க்கள் , மத்திய மாநில அமைச்சர்கள் என அனைவரும் யோகா செய்ய வேண்டும் , இது அவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும், புறக்கணித்தால் ஒன்றும் கிட்டாது என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறினார்.



latest tamil news



நாளை ( ஜூன் 21 ம் தேதி ) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா பயிற்சியில் மக்கள் பங்கேற்க உள்ளனர். மகாராஷ்ட்டிராவில் நடந்த யோகா தினத்தில் பங்கேற்ற யோகாகுரு பாபா ராம்தேவ் நிருபர்களிடம் பேசுகையில்;


நேரு, இந்திரா யோகா


யோகா தினம் மிக சிறப்பானது. இந்நாளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ,எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென அவர்கள் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது யோகாவுக்கென எதுவும் செய்யவில்லை. நேரு, இந்திரா யோகா பயிற்சியை ரகசியமாக செய்தனர். அதன் பின் வழி வந்த நேரு குடும்பத்தினர் யோகாவை புறக்கணித்தனர். இதனால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தனர்.


latest tamil news



யோகா முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் (பிரதமர் மோடியை மறைமுகமாக கூறினார்) கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இல்லாது போனால் எதிர்மறை தான் கை கூடும். எதுவும் கிட்டாது. இந்தியாவிலேயே மக்களோடு மக்களாக யோகா செய்த ஒரே பிரதமர் மோடி தான் . அனைவரும் தவறாமல் யோகா செய்யுங்கள். இவ்வாறு பாபா கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X