சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் - வேன் மோதி விபத்து: விவசாயி பலி

Added : ஜூன் 20, 2019
Advertisement

பொம்மிடி: பொம்மிடி அருகே, பைக் மீது, பொலீரோ பிக்கப் வேன் மோதி விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த குண்டலமடுவை சேர்ந்தவர் காமராஜ், 49; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, வாசிக்கவுண்டனூரில் உள்ள தனது மகள் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று விட்டு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் வீடு வந்தார். அரூர்- பொம்மிடி சாலையில், கதிரிபுரம் பெருமாள் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த பொலீரோ பிக்கப் வேன் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த காமராஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து, பொம்மிடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X