விண்வெளி துறையில் இந்தியா சூப்பர் பவர்: ஜனாதிபதி

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (17)
Advertisement

புதுடில்லி : கறுப்பு பணத்தை பதுக்குவோரை கண்டுபிடித்து தண்டிக்கும் விதமாக சிறப்பு சட்டங்கள் இயற்றப்படும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் என பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில் குறிப்பிட்டார்.


அவர் மேலும் பேசியதாவது: உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடம் பெற்றுள்ளது. 2022 ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக விளங்கும். ஜி.எஸ்.டியால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
விண்வெளி தொழில் நுட்பத்தால் இந்தியாவின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா சூப்பர் பவராக விளங்குகிறது.
எந்த துறையிலும் லஞ்சம், ஊழலை அரசு பொறுத்து கொள்ளாது. கறுப்பு பணத்தை பதுக்குவோரை கண்டுபிடித்து தண்டிக்கும் விதமாக சிறப்பு சட்டங்கள் இயற்றப்படும் . இது தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு 130 கோடி இந்தியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் .


பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாதேசிய பாதுகாப்புக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. பயங்கரவாத ஒழிப்புக்கு அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் தப்பிக்க முடியாது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா எடுத்த நடவடிக்கையே காரணம். மிஷன் சக்தி திட்டத்திற்கு பின் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்தும் யாரும் அதற்கானை விலையை சந்தித்தே ஆக வேண்டும். அதற்கு சான்றாக நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாராட்டுதலுக்குரியது.


தமிழகத்தில் ராணுவ பாதைஇந்தியா இன்னும் ரபேல் விமானங்களை கூடுதலாக வாங்கிட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்தியாவுக்கு ஊடுருவல் அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது. தமிழகம் மற்றும் உ.பி.,யில் ராணுவ தளவாட உற்பத்தி பாதை அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும்.முத்தலாக் முறை நீக்கப்பட வேண்டும். 2022ல் இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்துவோம்.
நாட்டில் உள்ள பெண்கள் உரிமை முக்கியமானது. நமது சகோதரிகளும், மகள்களும் சம உரிமை பெற வேண்டும். இவர்களுக்கான முத்தலாக் முறை அகற்றப்பட வேண்டும். முத்தலாக் தடை சட்டம் அவசியம் கொண்டு வரப்பட வேண்டியதாகும். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
21-ஜூன்-201908:12:06 IST Report Abuse
Ravi கணக்கில் காட்டாத சொத்து , பணம் வைத்து இருந்தால் அவர்களுடைய மொத்த குடும்பமும் சிறை என்று சொல்லிப்பாருங்கள் ரமணா படம் மாதிரி ஒரு நீண்ட Q நிற்கும் , .
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201916:55:59 IST Report Abuse
பழனிச்சாமி கிருத்துவங்கள் ஹிந்து பெயர்களை வைத்துக் கொள்ளக்கூடாதுன்னு அவசர சட்டம் வேனும். மக்களே, இது போன்ற ஹிந்து துரோகிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வையுங்கள்.
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
20-ஜூன்-201918:46:20 IST Report Abuse
Anandஅவர்களை கண்டுபிடிப்பது மிக சுலபம், கண்ணை மூடிக்கொண்டு மோடி ஒழிக என்பான் ......
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
20-ஜூன்-201916:17:06 IST Report Abuse
dandy சொந்தமாக ஒரு MOBILE PHONE உற்பத்தி செய்ய திராணி இல்லை ..விண்வெளி ...வித்தகர்களாம் ...ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
20-ஜூன்-201918:01:58 IST Report Abuse
Balajiஎவ்வளவு கீழ்த்தரமான காழ்ப்புணர்ச்சி. மோடி ஆழ்கிறார் என்பதாலா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X