பொது செய்தி

இந்தியா

வாட்ஸ்ஆப்பில் தலாக் : கணவர் மீது வழக்கு

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

சூரத் : வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் மூன்று முறை தலாக் அனுப்பி மனைவியை விவாகரத்து செய்ய முயன்றவர் மீது, அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.latest tamil news


குஜராத்தின் வல்சத் மாவட்டத்தின் சஞ்சன் பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணான பர்ஹிமிற்கு, வெளிநாட்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவரது கணவர் ஜெய்லுன் கலியா, வாட்ஸ்ஆப் மூலம் 3 முறை தலாக் அனுப்பி உள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த முத்தலாக்கை பிரிண்ட் அவுட் எடுத்த கலியாவின் பெற்றோர்களான ஜாவித் மற்றும் நபிசா ஆகியோர் உள்ளூர் ஜமாத்தில் அளித்துள்ளனர். ஜமாத் மூலம் பர்ஷிமிற்கு விவாகரத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதனை ஏற்க மறுத்த பர்ஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜூன் 14 அன்று உமர்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கலியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கலியா வெளிநாட்டில் உள்ளதால் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கலியா குறித்து விசாரித்த போது, அவர் துபாயில் உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் உண்மையில் கலியா, கனடா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


latest tamil news


கலியா தனது தலாக் நோட்டீசில், தனது மகனை, குழந்தையில்லாத தனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு பர்ஹிம் விவாகரத்து கொடுத்து விட்டு, விலகிச் சென்று விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜமாத் அமைப்பினரின் வாக்குமூலத்தை கேட்ட பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201920:45:57 IST Report Abuse
Diya Human rights should be same across all religion. One India, one law should be there. Law should not be tweaked based on religion.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஜூன்-201920:05:18 IST Report Abuse
Girija பெண்களின் அறியாமையை மத சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தலாக் விவகாரம் முஸ்லீம் பெண்களின் கையிலேயே கொடுத்து விடுவதான் நல்லது . உடம்பு சரியில்லையென்றால் நாட்டு வைத்தியாமா இல்லை ஆங்கில வைத்தியமா என்று மனதுக்கு பிடித்த முறையை தேர்ந்தெடுப்பது போல ஜமாத்தா இல்லை இந்திய கோர்ட்டா என்று முடிவெடுத்து அவர்களாகவே தேர்ந்தெடுக்கட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
20-ஜூன்-201919:21:59 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam There will be lot of pressure on the muslims. They have to change their attitude sooner or later.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X