வாட்ஸ்ஆப்பில் தலாக் : கணவர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாட்ஸ்ஆப்பில் தலாக் : கணவர் மீது வழக்கு

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (27)

சூரத் : வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் மூன்று முறை தலாக் அனுப்பி மனைவியை விவாகரத்து செய்ய முயன்றவர் மீது, அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





குஜராத்தின் வல்சத் மாவட்டத்தின் சஞ்சன் பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணான பர்ஹிமிற்கு, வெளிநாட்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவரது கணவர் ஜெய்லுன் கலியா, வாட்ஸ்ஆப் மூலம் 3 முறை தலாக் அனுப்பி உள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த முத்தலாக்கை பிரிண்ட் அவுட் எடுத்த கலியாவின் பெற்றோர்களான ஜாவித் மற்றும் நபிசா ஆகியோர் உள்ளூர் ஜமாத்தில் அளித்துள்ளனர். ஜமாத் மூலம் பர்ஷிமிற்கு விவாகரத்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.




இதனை ஏற்க மறுத்த பர்ஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜூன் 14 அன்று உமர்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கலியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கலியா வெளிநாட்டில் உள்ளதால் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கலியா குறித்து விசாரித்த போது, அவர் துபாயில் உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் உண்மையில் கலியா, கனடா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.




கலியா தனது தலாக் நோட்டீசில், தனது மகனை, குழந்தையில்லாத தனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு பர்ஹிம் விவாகரத்து கொடுத்து விட்டு, விலகிச் சென்று விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜமாத் அமைப்பினரின் வாக்குமூலத்தை கேட்ட பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X