பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.






அனல் காற்று :

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்றுவீசவும் வாய்ப்பு உண்டு. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் 11 மணி முதல் 4 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.


மலைப்பகுதிகளில் மழை :

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதேபோல, மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி மாவட்டங்களான ஈரோடு, தேனி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவு மற்றும் நாளை மாறுநாள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.





குன்னுாரில் மழை :

வெப்பநிலையானது நாளை முதல் பல பகுதிகளில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் குன்னுார், பெரியகுளம் மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் 2 செ.மீ.,வரை மழை பெய்துள்ளாதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே தற்போது அரியலுார் மாவட்டம் செந்துறை பகுதிகளில் பலத்த காற்றுடன் நண்பகல் முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
20-ஜூன்-201920:46:17 IST Report Abuse
J.Isaac இறைவன் அருள்புரிய முதலாவது இறைவன் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒழுக்கமாக வாழ வேண்டும். பணப்பேய் பதவி பேய் பிடித்து அலைய கூடாது
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
20-ஜூன்-201917:54:46 IST Report Abuse
ديفيد رافائيل அய்யோ.......... வானிலை நியூஸ் போட்டாலே வர்ற மழையும் போயிடுமே...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூன்-201915:28:53 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல மழை கிடைக்க இறைவனை வேண்டுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X