பொது செய்தி

இந்தியா

2020ல் சென்னையில் நிலத்தடி நீர் இருக்காது

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி : 2020 ம் ஆண்டில் டில்லி, சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.





நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2020ல் டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் வறண்டு போகும் நிலை ஏற்படும்.
இதனால் 100 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 2030 ல் ஏறக்குறைய இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இந்த அபாய நிலையை எச்சரிப்பதற்கான சூழல் 2020 ம் ஆண்டிலேயே துவங்கும்.




சென்னையில் உள்ள 3 நதிகள், 4 நீர் ஆதாரங்கள், 5 நீர்நிலைகள், 6 வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போகும். இருப்பினும் மற்ற மெட்ரோ நகரங்களில் நீர்நிலையில் போதிய அளவிலும், மழையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து தேசிய நீர்வள கழக முன்னாள் இயக்குனர் மனோகரன் குஷலானி கூறுகையில், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு அதிக செலாகும். அத்துடன், புவியில் குறிப்பிட்ட அளவே நீர் உள்ளது. கடல்நீரை குடிநீராக்கினால் கடல்கள் வற்றிவிடும் என்பதை இவர்கள் மறந்து விட்டனர்.
நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நாம் எதை விட்டு செல்ல போகிறோம்? நம்மிடம் ஏராளமான பணம் இருக்கலாம். ஆனால் நமது குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீருக்கு பதில் பணத்தை குடிக்க முடியாது. கடல்நீரை குடிநீராக்குவது தீர்வாகாது. அதற்கு பதில், நீரை பாதுகாக்க வேண்டும்.




இது நாட்டு மக்கள், அரசு ஒட்டுமொத்தமாக பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பது ஒன்றும் கஷ்டமானதோ அல்லது அதிக செலவாகக் கூடியதோ அல்ல. நமது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு இதனை நாம் செய்தாக வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201901:30:13 IST Report Abuse
Rajagopal நதிகளை இணைக்கலாம் என்றால் திராவிட அரசியல்வாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், கம்யூனிஸ்டுகளும் எதிர்த்துப் போர்க்கொடித் தூக்கத் தயாராக இருக்கிறார்கள். மாநிலம் ஏற்கனவே ஈவெரா மண்ணாக (சுடுகாடு என்பதற்குப் பதிலாக ஒருப் பண்பான சொல்) ஆகி விட்டது. பூமிக்கடியில் இனிமேல் சாராயம்தான் வர போகிறது.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-ஜூன்-201920:40:36 IST Report Abuse
J.Isaac விவசாய நிலங்களை அழித்து எண்ணெய், மீதேன் எடுப்போம் . காடுகளையும் மரங்களையும் அழித்து ரோடு போடுவோம் . நகரங்களில் மரங்களை அழித்து சாலைகளை விரிவு படுத்துவோம் . பாலம் கட்டுவோம். ஆறுகளில் மணல் கூட்டு கொள்ளை நடத்துவோம் பாஜாகா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் ஆருர் ஒருநாள் வருத்தபட வேண்டியதிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kalam - Salem,இந்தியா
20-ஜூன்-201920:11:34 IST Report Abuse
Kalam தண்ணீர் நிர்வாகம் செய்ய தொலை நோக்கு திட்டங்கள் தேவை. இதற்கு பல திறன் கொண்ட டீம் தேவை, ஆனா முடிவு எடுக்கறது என்னமோ அரை குறையா படிச்ச மந்திரிங்கதானே .இந்த மாதிரி ஒரு நிபுணர் குழு ஆராய்ச்சி செய்து மந்திரி கிட்ட குடுத்தா அதுல ஒட்டு வருதா , கமிஷன் வருதான்னு மட்டுமே மந்திரி பாப்பாரு . குறுகிய கால விளம்பரமும் வோட்டு வங்கியும்தான் மந்திரி கொள்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X