பொது செய்தி

தமிழ்நாடு

வறண்ட சென்னைக்கு வந்தது மழை

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (29)
Advertisement
சென்னை,ம ழை

சென்னை: சென்னையில் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு (இன்று ஜூன் 20) மழை பெய்தது.

சென்னையில், கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் அவதிப்பட்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீரை தேடி மக்கள் அலைந்தனர். உணவகங்கள் மூடப்பட்டன. பல இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி போராட்டம் நடந்தது.


இந்நிலையில், சென்னையில் வேளச்சேரி, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல். போரூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், தரமணி, கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் , ஆலந்தூர், நசரத்பேட்டை, கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், குன்றத்தூர், தரமணி, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், தாம்பரம், மேடவாக்கம், ராயப்பேட்டை திருமழிசை உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடும் வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக மக்கள் அவதிப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு, மழை பெய்தது மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது.


கடும் வெயிலிலிருந்து தப்பிக்க மழையை எதிர்பார்த்த மக்களுக்கு திடீரென்று பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.இடம் :பல்லாவரம்.

கடும் வெயிலிலிருந்து தப்பிக்க மழையை எதிர்பார்த்த மக்களுக்கு திடீரென்று பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.இடம் :பல்லாவரம்.Advertisementகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மழை பெய்தது.


இடம் :பல்லாவரம்.

இடம் :பல்லாவரம்.


அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்தது2 நாள் மழைக்கு வாய்ப்புஇதனிடையே, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், வட மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாளுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.டிரெண்டிங்கில் சென்னை மழை


இதனிடையே, சென்னையில் மழை பெய்ததை தொடர்ந்து, ஏராளமானோர், டுவிட்டர் வலைதளத்தில் தங்களது கருத்துகளையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதற்காக ''chennairain'' என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கினர். இது இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஜூன்-201905:30:21 IST Report Abuse
meenakshisundaram 'நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை'என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து வாழ வேண்டும்.தனது வாழ்வில் அவன் மற்றவரை பற்றி நினைக்க வேண்டும் ,பிறர் நலம் காக்க வேண்டும் ,பிறன் மனை விழையாமை வேண்டும் ,பிறன் மொழியை போற்றவேண்டும் ,சுயநலத்துக்காக எதையுமே செய்யாமல் இருந்தால் அவன் எதையுமே 'இலவசமாக' பெற வேண்டியதில்லை .இயற்கை உதவும்.வேதங்களை போற்றுவோம் ,யாகங்களை செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201907:44:26 IST Report Abuse
மதுவந்தி வண்ணக் குடங்கள் வண்ணக் குடைகளாக மாறியதை பார்க்கும் போதே மகிழ்ச்சி.இன்னும் வரவேண்டும் பூமி குளிர செழிக்க. இறைவனுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201919:29:58 IST Report Abuse
Natarajan Ramasamy உண்மையை. உணருங்கள். மழை என்பது இயற்க்கையின் செயல்.மனிதனுக்கு மட்டும் பெய்வதில்லை காடுகளிலும் கடல் மீதும் மழை பெய்வது எல்லா ஜீவராசிகளுக்காகவும். அதில் செடிகளும் மரங்களும் விலங்குகளும் பறவைகளும் அடங்கும். சேமித்து வைக்கும் பழக்கம் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இயற்கை கொடுக்கும் மழை நீரை சேமித்து வைத்ததை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளாத பிராணி மனிதன். அதை விற்பனை பொருளாகவும் அரசியல் பகடியாகவும் மாற்றி வேடிக்கை பார்க்கும் ஜென்மம். காங்கிரஸ் ஆண்டபோது நம் பரம எதிரி பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீரையே தாரைவார்த்தவன்.ஆனால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு தரமாட்டான். BJP 5 ஆண்டுகள் ஆண்டபின்னும் சென்னை வறண்டு போகுமளவுக்கு விட்டாச்சு. DMK க்கு எல்லா MP சீட்டும் கொடுத்தாலும் , காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவை தண்ணீர் கேட்கமாட்டான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆமை வேகத்தில் போகின்றன. என்ன ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X