ஜனாதிபதி பேசும்போது போனில் மூழ்கிய ராகுல்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (60)
Advertisement
ஜனாதிபதி உரை, Congress,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, சோனியா, சோனியா காந்தி, மொபைல் போன்

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில் இன்று (ஜூன் 20) ஜனாதிபதி ராம்நாத் உரையாற்றும்போது, அதில் கவனம் செலுத்தாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல், மொபைல் போனில் மூழ்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பார்லிமென்டின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். லோக்சபா கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், ஜனாதிபதி உரையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, தனது மொபைல்போனை எடுத்து, அதில் கவனம் செலுத்தினார். சுமார் 24 நிமிடங்கள், மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த அவர், அதில், ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து, மொபைல் போனில் படம் பிடித்த ராகுல், 20 நிமிடங்கள் தனது தாயார் சோனியாவுடன் பேசி கொண்டிருந்தார். ஜனாதிபதி உரைக்கு எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். சோனியாவும் மேஜையை தட்டினார். ஆனால், ராகுல் அதனை கண்டுகொள்ளவில்லை.





ஜனாதிபதி உரையில், சர்ஜிக்கல் தாக்குதல், பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் குறித்து குறிப்பிட்டார். அப்போது, சோனியா உள்ளிட்ட அனைத்து எம்.பி.,க்களும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு மாறாக, ராகுல் தரையை பார்த்து கொண்டிருந்தார். இடை இடையே, ராகுலை சோனியா கவனித்து கொண்டிருந்தார். ராகுல், அமைதியாக அமர்ந்திருந்தார். ராகுலின் இந்த செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
25-ஜூன்-201920:45:38 IST Report Abuse
தாமரை ராகுலிடம் மிகவும் அதிகமாக எதிர்பார்ப்பது நமது தவறு. பாவம் விளையாட்டுப் பிள்ளை . மொபைல் விளையாட்டில் மூழ்கியுள்ள அவரை தொந்தரவு செய்வதே பாவம்.
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
24-ஜூன்-201907:13:58 IST Report Abuse
KumariKrishnan Bjp கனவு பலிக்கவில்லையே என்னும் விரத்தியால் ஏற்பட்டு இருக்கலாம் அவர் அம்மா அவரை கவனிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஜூன்-201917:00:00 IST Report Abuse
ganapati sb ராகுலுக்கு அன்று பிறந்த நாள் என்பதால் அலைபேசி மூலம் வந்த வாழ்த்துக்களை பார்த்துக்கொண்டு இருந்திருப்பார் போகட்டும் அடுத்தமுறை இவ்வாறு செய்தல் விமர்சிப்போம் ராகுலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X