சலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (44)
Advertisement

கோல்கட்டா ; குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் முஸ்லிம்கள் என்பதால் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை. எங்களுக்கு சலுகை காட்டாதீர்கள் என்று முக்கியமான முஸ்லிம் பிரமுகர்கள் மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.






டாக்டர் மீது தாக்குதல்

இந்த பகிரங்க கடிதத்தை கோல்கட்டாவை சேர்ந்த 46 முஸ்லிம் குடியிருப்பு வாசிகள் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ''சமீபத்தில் கோல்கட்டா நில் ரத்தன் சிர்கார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஒரு முஸ்லிம் நோயாளி இறந்துவிட்டார். அவரது உறவினர்கள் டாக்டரை தாக்கினர்.


டாக்டர்கள் ஸ்டிரைக் ;

அதை கண்டித்து ஒரு வாரம் மாநிலம் முழுக்க டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கியதால், மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் அல்லாடினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் எழுந்துள்ளது.
நாங்கள் இதை விரும்பவில்லை. மற்றவர்களை விட எந்தவகையிலும் கருணையை எதிர்பார்க்கவில்லை. எங்களை சங்கடப்படுத்த வேண்டாம்,'' என்று டாக்டர் நேஹா ஹீபீஸ் என்பவர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.





மாடல் நடிகைக்கு இழிவு

அதேபோல, கடந்த திங்களன்று கோல்கட்டாவில் மாடல் நடிகையும், முன்னாள் இந்திய அழகியமான உசோஷி சென்குப்தா பைக்கில் வந்த இளைஞர்களால் துரத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதிலும் முஸ்லிம் இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், முதலில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


சலுகை காட்டாதீர் ;

பின்னர், 7 பேர் கைதுசெய்யப்பட்டு, ஒரு எஸ்.ஐ., மற்றும் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது முஸ்லிம்கள் என்று பார்க்காமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் சலுகை காட்டப்படுவதையோ அல்லது வாக்கு வங்கியாக பயன்படுத்தப் படுவதையோ விரும்பவில்லை, என்று அந்த கடிதத்தில் முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
26-ஜூன்-201911:44:27 IST Report Abuse
s.rajagopalan தகுதி அடிப்படையில் இல்லாமல் 'எளிமையானவர், துணிச்சல்காரி ...." என்ற கவைக்குதவாத குணங்களுக்காக வங்காளிகள் முதல்வராக்கியதன் கெட்ட பலன் இது. ஒவ்வொரு வங்காளியும் தலை குனிய வேண்டும். மக்களாட்சி யை துஷ் பிரயோகம் செய்கிறார். 'எந்த' வழியிலாவது இவர் அரசை கவிழ்ப்பது வங்காள மாநிலத்திற்கும் நாட்டிற்கும் நல்லதே ஜனநாயகம், வெங்காயம் என்றெல்லாம் பேசுவது இவர் விஷயத்தில் ஒத்து வராது.
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
26-ஜூன்-201911:06:15 IST Report Abuse
venkatesaperumal முதலில் சட்ட விரோதமாக வூடுவுருவிய பங்காளதேசிகளை இந்தியாவைவிட்டு விரட்டி விட இந்த முஸ்லீம் நண்பர்கள் உதவுவார்களா ??
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
25-ஜூன்-201916:11:08 IST Report Abuse
I love Bharatham சலுகை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு ....சலுகை காட்டிய உங்களை எல்லாம் ....வாய்ல வரல ....பதிவுக்காக ..எதை வேண்டும் என்றாலும் செய்வீர்களா மம்தா அவர்களே ....பயங்கர வாதிகளை யோட..நீங்கள் தன பயங்கரவாதி ..... SHAME
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X