அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னை: கேரள உதவியை புறக்கணித்தது தமிழகம்

Updated : ஜூன் 20, 2019 | Added : ஜூன் 20, 2019 | கருத்துகள் (15)
Advertisement

சென்னை: தமிழக குடிநீர் பிரச்னை தீர்க்க முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு புறக்கணித்தது.







தமிழகத்தில் கடந்தசில மாதங்களாக கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது.மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்னைபூதகரமாக நிலவி வருகிறது.சென்னையை பொறுத்த வரையில் ஓட்டல்களில் மதிய உணவை ரத்து செய்யும் அளவிற்கு குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.






இந்நிலையில் கேரள முதல்வர் பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவ தயாராக இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப தயார். இது குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு தற்போது உடனடி தேவை இல்லை எனமறுத்து விட்டது என பதிவிட்டுள்ளார்.


மேலும் கேரள மாநில நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில் கேரளாவின் சலுகையை பழனிசாமி அரசு ஏற்க மறுத்தத்தற்கான காரணம் தெரியவில்லை. உடனடித்தேவை தீர்த்து வைக்கப்பட்டதால் இப்போதைக்கு தங்களுக்கு குடிநீர் தேவையில்லை என தமிழகம் கூறியதாக அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார். மேலும் கேரளாவில் தற்போது நீர்பாசன தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான தண்ணீர் இல்லை எனவும் தெரிவித்தார்.


தமிழக அரசு விளக்கம்


இந்த விவகாரம் குறித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது: கேரள அரசுதர முன்வந்த தண்ணீரை தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. தேவைப்பட்டால், கேரளாவிடம் இருந்து தண்ணீர் பெறப்படும். கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததற்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கேரளா தருவதாக கூறிய 20 லட்சம் லிட்டர் தண்ணீரை இங்கேயே சமாளித்து வருகிறோம். கேரளா தினமும்20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கினால் நன்றாக இருக்கும் எனக்கூறினோம். நாளைய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., உரிய முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


கேரள முதல்வருக்கு ஸ்டாலின்நன்றி



தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்க முன்வந்த கேரள முதல்வரை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். கேரள அரசு முன்வந்த வழங்க இருந்த தண்ணீரை ஏற்றுக்கொள்ளாதது கண்டனத்திற்குரியது எனவும் ,தண்ணீரை தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்புவதாகவும் என ஸ்டாலின் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-ஜூன்-201914:17:58 IST Report Abuse
Cheran Perumal வெறும் விளம்பரத்திற்காக சொல்லப்பட்டது. இப்போது தேசிய அளவில் இதை பெரிதுபடுத்தி தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக காட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
21-ஜூன்-201900:08:24 IST Report Abuse
Ram முல்லை பெரியாறு , சிறுவாணி போன்ற விஷயங்களில் நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யவும் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201900:01:21 IST Report Abuse
கோகுல், மதுரை இது சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 2 சதவீதம் மட்டுமே நிவர்த்தி செய்யும்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-ஜூன்-201914:18:42 IST Report Abuse
Cheran Perumalதினமும் இல்லை. ஒரே ஒரு முறை மட்டும். அதுக்குதான் இவ்வளவு அலப்பறை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X