பதிவு செய்த நாள் :
மத கோஷங்களை அனுமதிக்க முடியாது:
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு

புதுடில்லி:''லோக்சபாவில், மதம் தொடர்பான கோஷங்கள் எழுப்ப அனுமதிக்க முடியாது. சபையின் மாண்பு மற்றும் மரபை கட்டிக் காக்க, அனைத்து, எம்.பி.,க்களும் ஒத்துழைக்க வேண்டும்,'' என, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா கூறினார்.

பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலில் வென்ற, எம்.பி.,க்கள் பதவியேற்கும்நிகழ்ச்சி சமீபத்தில்நடந்தது.அப்போது, 'ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே' என, பா.ஜ.,வினர் தொடர்ந்து கோஷமிட்டனர். தங்களை கிண்டல் செய்யும் வகையில், ஆளும் கட்சியினர், இவ்வாறு கோஷமிட்டதாக, எதிர்க்கட்சிகள் புகார் கூறின.


இந்நிலையில்,லோக்சபா சபாநாயகராக,

பா.ஜ.,வைச் சேர்ந்த, ஓம் பிர்லா, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவர் நேற்று அளித்த பேட்டி: பார்லிமென்ட் என்பது கோஷங்கள் எழுப்புவதற்கும், பதாகைகளை காட்டுவதற்கும், மையப் பகுதிக்கு வந்து கூச்சல் போடுவதற்கு மான இடம் இல்லை. தங்களுடைய தொகுதி மற்றும் மக்களின் பிரச்னைகள் குறித்தும், பொதுப் பிரச்னைகள் குறித்தும், சபையில் உறுப்பினர்கள் பேசலாம். அதற்கான விதிகள் உள்ளன; அதன்படியே நடந்து கொள்ள வேண்டும்.


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முறையை, உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. பார்லியின் மாண்பு, மரபு, கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.நம்பிக்கை பொறுப்புடன் செயல்பட்டு, பார்லிமென்டில்

Advertisement

எப்படி செயல்பட வேண்டும் என, உலக நாடுகளுக்கு உதாரணமாக இருப்போம்.


எம்.பி.,க்கள் பதவியேற்பின்போது எழுப்பப்பட்ட கோஷங்கள் மற்றும் வாசகங்களை, தற்காலிக சபாநாயகராக இருந்த,வீரேந்திர குமார், சபை குறிப்புகளில் இருந்து நீக்கி,சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்.சபையில், மத ரீதியிலான கோஷங்கள் எழுப்ப,அனுமதிக்க முடியாது. பார்லிமென்ட் என்பது, ஜனநாயகத் தின் கோவில். இங்கு விதிகளின்படியே செயல்பட வேண்டும். அனைத்துக்கட்சிகளும் என்னை, ஒருமனதாக, சபாநாயகராக தேர்ந்தெடுத்துள்ளன. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.


மிகப் பெரியவெற்றியைப் பெற்றுள்ளதால், ஆளும் தரப்புக்கு அதிக பொறுப்பும் உள்ளது. நான், கடுமையாக நடந்துக்கொள்ள விரும்ப வில்லை. அதற்கான வாய்ப்பை, எம்.பி.,க்கள் தரவும் கூடாது. இவ்வாறு, ஓம் பிர்லா கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
21-ஜூன்-201916:57:39 IST Report Abuse

r.sundaramஊழலை ஒழிப்போம் என்று ஒருத்தரும் கோஷம் போடவில்லை.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஜூன்-201911:56:39 IST Report Abuse

ganapati sbகாந்திஜி சொன்னது போல ராமராஜ்யம் என்றாலே நல்ல ஆட்சிக்கு சிறப்பான உதாரணம். ராமன் என்பது மத சார்பானதும் அல்ல இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களும் தாய்லாந்தில் பவுத்தர்களும் கூட ராமன் பெயரை பயன்படுத்துகிறார்கள். அயோத்தி ராமன் உலகிற்கு உதாரண புருஷன்.

Rate this:
chails ahamad - doha,கத்தார்
21-ஜூன்-201911:21:23 IST Report Abuse

chails ahamadபா ஜ வினால் தேர்ந்து எடுக்கப்பட்ட எம் பி என்பதை மனதிக் கொண்டாலும், ஜெய் ஸ்ரீராம் கோசங்கள் அவரவர் வீட்டிலே, அவரவர் குல தெய்வங்களின் வாசலிலே, ஒலிப்பதை பற்றி எவருக்கும் கவலையில்லை என்றாலும், மக்களவையில் அநாகரிகமாக அந்த கோசங்கள் எழுப்பியதை கண்டித்துள்ளது உள்ளபடியே பாராட்டுதலுக்கு உரியதாகும், அவரவர் மதத்தை அவரவர் விரும்புவதில் தவறில்லை அதே வேளையில், அந்த மதங்கள் அவரவர் வீட்டிலும் கோசங்கள் அவரது தெய்வ சன்னிதியிலும் ஒலிப்பதே ஏற்புடையதாகும், அதனை தவிர்த்து மக்களவையில் அநாகரிகமாக மத கோசங்கள் எழுப்பியது தவறே, அதனை சபை குறிப்பில் இருந்து அப்போதைய தற்காலிக சபாநாயகர் நீக்கியதும் பாராட்டுக்குரியதே, தற்போதைய சபாநாயகர் அனைத்து கட்சியினராலும் ஒருமித்த கருத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதை நினைவில் கொண்டு சபையின் மாண்பினை மனதில் கொண்டு செயல்படுவார் என்பதை நம்புவோமாக, வாழ்க பாரதம் .

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X