பதிவு செய்த நாள் :
தலைவர் பதவி ராஜினாமா முடிவு
ராகுல் பிடிவாதம் தொடர்கிறது

புதுடில்லி: ''காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதை, நான் முடிவு செய்யப்போவதில்லை; கட்சி தான், அந்த பொறுப்பை மேற்கொள்ளும். அதில் நான் தலையிடுவது பொருத்தமாக இருக்காது,'' என, அக்கட்சியின் தலைவர், ராகுல், 49, கூறினார்.

தலைவர்,பதவி,ராஜினாமா, ராகுல்,பிடிவாதம்,தொடர்கிறது


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், 44 இடங்களில் வென்ற காங்கிரஸ், சமீபத்தில் முடிந்த, 2019தேர்தலில்,52 இடங்களை மட்டுமே பிடித்தது.ராகுல் போட்டியிட்ட 2 தொகுதிகளில், அமேதியில்,பா.ஜ., வின் ஸ்மிருதி இரானியிடம் படுதோல்வி அடைந்தார்;கேரளாவின்

வயநாட்டில், அமோக வெற்றி பெற்றார்.கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, அவர் முன்வந்தார்.


ராஜினாமா கடிதத்தை, காங்., காரிய கமிட்டியிடம், அவர் சமர்ப்பித்த போதிலும்,அது,ஏற்க பட வில்லை. சமீபத்தில்,லோக்சபாவின் காங்.,தலைவர் பதவியை யும் ஏற்க மறுத்த ராகுல், அந்த பொறுப்பை, மேற்கு வங்கத்தை சேர்ந்த, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு, விட்டு கொடுத்துள்ளார். இந்நிலையில், காங்., அடுத்த தலைவர் யார் என, ராகுலிடம், டில்லியில் நேற்று நிருபர்கள் கேட்டனர்.



அதற்கு அவர், ''காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பதைநான் முடிவு செய்யப் போவது இல்லை.' 'அந்தப் பொறுப்பை, கட்சி தான் மேற்கொள்ளும். அதில் நான் தலையிடுவது, பொருத்தமாக இருக்காது,'' என்றார்.இதன் மூலம், ராஜினாமா முடிவில், அவர், இன்னமும் உறுதியாக இருப்பது தெரிகிறது.அதுபோல, லோக்சபா தேர்தல்

Advertisement

பிரசாரத்தின் போது, 'ரபேல்' போர்விமானங் களை, மோடி அரசு கொள்முதல் செய்ததில், ஊழல் நடந்துள்ளது என, தீவிரமாக பிரசாரம் செய்த ராகுல், இப்போதும் அதில் உறுதியாக உள்ளார்.

நிருபர்களிடம் நேற்று பேசிய அவர், ''ரபேல் விமான கொள்முதலில், திருட்டு நடந்துள்ளது உண்மை தான். அந்த கருத்தில் எனக்கு மாற்ற மில்லை. முறையாக விசாரித்தால், உண்மை வெளிவரும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201917:52:38 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>குரங்கிவாலை மருந்துக்குபிச்சுக்கிறேன்னா கிளைக்களை தாவுமாம் (வாலைi அறுத்துண்டால் வலி தாங்கமுடியுமோ குரங்குக்கு )அதேபோல தான் இந்த ராகுலுக்கு ரொம்பவே பாட்டம் போட்டுண்டுருக்காக

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஜூன்-201922:00:16 IST Report Abuse

Natarajan Ramanathanஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்க பேருதவிபுரிந்த ஊழல் காங்கிரஸுக்கு நம்ம சைகோதான் மிகவும் பொருத்தமான தலைவராக இருப்பார்.

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
21-ஜூன்-201914:44:44 IST Report Abuse

Sridhar Rengarajanராகுல்ஜி ரொம்ப பிகு செய்தால் அப்படியே கழட்டி உட்டுடுவாய்ங்க. ஒங்க குடும்பத்த தலைமை பதவியில் வைத்து அங்கு காலங்காலமாக ஒரு கூட்டமே கொள்ளையடித்து குவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மலைமுழுங்கி மகாதேவனுங்களுக்கு தேவை ஒரு டம்மி தலைமை.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X