பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தோட்டக்கலை பண்ணைக்கு போட்டியாக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி தீவிரம்

Added : ஜூன் 20, 2019
Advertisement
 அரசு தோட்டக்கலை பண்ணைக்கு போட்டியாக மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி தீவிரம்

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு போட்டியாக, மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வர்த்தக ரீதியாக 5 லட்சம் வீரிய ஒட்டு ரக முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆண்டுதோறும் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வி.ஆர்.ஐ.-3 வீரிய ஒட்டு ரக முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த ரகங்களை கண்டுபிடித்த விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், பெயரளவில் 1 லட்சத்திற்குள்ளாக மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.ஆனால், கடந்த 2012ல் தானே மறுவாழ்வு திட்டத்தில் மட்டும் 25 லட்சம் வி.ஆர்.ஐ., 3 முந்திரி செடிகள் உற்பத்தி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வழக்கம்போல வி.ஆர்.ஐ.-3, எச்.1 எனும் வீரிய ஒட்டு ரக முந்திரி உற்பத்தி செய்யப்பட்டது.இந்நிலையில், பேராசிரியர் மோதிலால் நிலையத்தின் தலைவராக உள்ளார். அவர் ஆராய்ச்சி மையமாக இருந்தால் மட்டும் போதாது என வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.விருத்தாசலம் தோட்டக்கலை பண்ணையில் நடப்பாண்டிற்கு 4 லட்சம் வி.ஆர்.ஐ., 3 வீரிய ஒட்டு ரக முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆராய்ச்சி பணிகளுக்கு மத்தியில் 5 லட்சம் கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், எச்.1 எனும் வீரிய ஒட்டு ரகத்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு, வேர்ச்செடிகள் உற்பத்தி செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இச்செடி ஒன்று 18 ரூபாய்க்கு கடந்தாண்டு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X