பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு இல்லாத சாலைகள் வேப்பூரில் பொதுமக்கள் அவதி

Added : ஜூன் 20, 2019
Advertisement

வேப்பூ:வேப்பூருக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் வரும் நிலையில், பத்து ஆண்டுகளாக தெருக்களில் சாலை அமைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வேப்பூரில் பெருமாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர், கிழக்கு மற்றும் வடக்கு தெரு, ஆடலரசன் நகர், நீலகண்டன் நகர், மகாலட்சுமி தெரு, பழைய மற்றும் புதுக்காலனி உட்பட 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த 2009-10 ஆண்டில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டது.கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு பணிகளும், புதிய சாலைகள் அமைக்கும் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இதனால், சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.வேப்பூர் ஊராட்சிக்கு வாரச்சந்தை ஏலம் மூலமாக ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், கடந்த பத்தாண்டுகளாக தெருக்களில் சாலை அமைக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வேப்பூர் ஊராட்சி தெருக்களில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X