அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மழைநீர் சேகரிப்பு வசதி களத்தில் கமல் கட்சி

தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் சார்பில், சென்னையில், வீடு தோறும், இலவசமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

 மழைநீர் சேகரிப்பு ,கமல் ,கட்சி


சென்னையில், எப்போதும் இல்லாத வகையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் கிடைக்காமல், மக்கள் திண்டாடி வருகின்றனர். இதையடுத்து, மக்கள் நீதி மையம் சார்பில், வீடு தோறும், இலவச மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைத்து தர

திட்டமிட்டு உள்ளனர்.இதன்படி, தமிழகத்தில், முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியின், 149வது வார்டான, வளசரவாக்கத்தில், இந்த திட்டத்தை, நாளை துவக்கஉள்ளனர்.



கட்சியின், சென்னை மண்டல பொறுப்பாளரான, கமீலா நாசர் தலைமையில் இப்பணி நடக்க உள்ளது.இதுகுறித்து, மாவட்ட பொறுப்பாளர், சண்முக சுந்தரம் கூறியதாவது:தண்ணீர் பிரச்னை கருதி, பருவ மழைநீரை சேமிக்க வசதியாக, ஒவ்வொரு வீட்டிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க, தலைவர் விரும்பினார். அவரது வழிகாட்டுதலின்படி, மண்டலபொறுப்பாளர் கமீலா நாசர், வீட்டுக்கு வீடு, இலவசமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை துவக்க உள்ளார்.


முதற்கட்டமாக, சென்னையில், இத்திட்டத்தை துவக்க உள்ளோம். கட்டமைப்பு ஏற்படுத்தி

Advertisement

தருவதற்கான அனுமதியுடன், 2 அடி அகலம், 4 அடி நீளமுள்ள இடவசதியும் அளித்தால், இலவசமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி தருவோம். எத்தகைய வீடாக இருந்தாலும், இந்த வசதியை செய்து தர முடியும். விருப்பமுள்ளோர், 98415 31567 என்ற, எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-ஜூன்-201913:09:00 IST Report Abuse

Rafi கமல்ஜி, நல்ல முயற்சி, தொடரட்டும் உங்கள் சமூக தொண்டு.

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201906:43:12 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நல்லது செய்றதுக்கு பதவிலே இருக்கணுமா என்ன ??நல்லமனம் இருந்தாலே போதும் வாழ்த்துக்கள் கமல்

Rate this:
Selva - CHENNAI,இந்தியா
21-ஜூன்-201919:52:10 IST Report Abuse

Selva பாராட்டத்தக்க செயல் வாழ்த்துக்கள் ,மக்கள் நீதி மய்யம் வளர்க ,, கமல் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X