பதிவு செய்த நாள் :
கேரள தண்ணீர், தமிழக அரசு, அலட்சியம்

தமிழக மக்களின் தாகம் தீர்க்க, தேவையான அளவு தண்ணீர் தர தயாராக உள்ளதாக, கேரள முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதை பெற, உடனடி நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. நம் உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி, 'ஆலோசிக்கிறோம்' என, கூறியுள்ளார். இன்று நடக்க உள்ள, முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில், அரசு உரிய முடிவெடுத்து, தண்ணீரை பெற்றுத் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன், முதல்வராக உள்ளார். சென்னை மக்களின் தாகம் தீர்க்க, திருவனந்தபுரத்தில் இருந்து, 20 லட்சம் லிட்டர் குடிநீரை, ரயிலில் அனுப்ப அவர் முன் வந்துள்ளார்.

இது தொடர்பாக, கேரள முதல்வர் அலுவலக அதிகாரிகள், சமீபத்தில், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். 'இப்போதைக்கு எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்' என, நம் அதிகாரிகள் கூறி விட்டனர். இவ்விபரத்தை, கேரள முதல்வர், தன் முகநுால் பக்கத்தில்,

நேற்று பதிவிட்டார். உடனே, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், கேரள முதல்வரை, தொலைபேசியில் அழைத்து, தண்ணீர் அனுப்ப முன் வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அதையடுத்து, கேரள தண்ணீரை, தமிழக அரசு வாங்க மறுத்த விவகாரம், தமிழக ஊடகங்களுக்குத் தெரிந்தது. உடனே சுதாரித்த, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதன் விபரம்:கேரள முதல்வரின் செயலர், 'தமிழகத்திற்கு ரயில் வழியே, 20 வேகன்களில், ஒரு முறை தண்ணீர் அனுப்பலாமா?' என, தமிழக முதல்வரின் செயலரிடம் கேட்டார்.

முதல்வர், மருத்துவமனைக்கு

சென்றிருந்ததால், தமிழக முதல்வரின் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு, தமிழக மக்களின் சார்பில், நன்றி தெரிவித்தார். மேலும், 'சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை, 52.50 கோடி லிட்டர் தண்ணீர். தற்போது, ஒரு முறை கேரளாவிலிருந்து அனுப்பப்படும், 20 லட்சம் லிட்டர் தண்ணீரை, இங்கேயே சமாளித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால், கண்டிப்பாக, கேரள அரசின் உதவியை நாடுவோம்' என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இன்று நடக்க உள்ள, குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், முதல்வர்,

உரிய முடிவை அறிவிப்பார். கேரள அரசு வழங்கும் தண்ணீரை, தமிழக முதல்வர் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை.இவ்வாறு, அமைச்சர், வேலுமணி கூறியுள்ளார்.இதுகுறித்து, கேரள முதல்வர் அலுவலக செய்தி தொடர்பாளர், அபு பக்கர், நம் நிருபரிடம் கூறியதாவது:

தமிழகத்திற்கு, தேவைப்படும் போது எல்லாம், தண்ணீர் அளிப்பதாக தெரிவித்தோம்; தமிழக அரசு ஏற்கவில்லை. கேரளாவில் வெள்ளம் வந்த போது, பிற பகுதிகளில் இருந்து, ரயிலில் தண்ணீர் எடுத்து வந்தோம். ரயில்வே துறையில், அதற்கான வசதிகள் உள்ளன.

தற்போது, எங்கள் மாநிலத்தில், போதுமான மழை பெய்து வருவதால், தண்ணீர் அதிகம் உள்ளது. கேரள குடிநீர் வாரியம் சார்பில், 20 லட்சம் லிட்டர் குடிநீரை, ரயிலில் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்திருந்தோம்; அதற்குள் தமிழக அரசு அதிகாரிகள், 'வேண்டாம்' எனக் கூறி விட்டனர். எனினும், தமிழக அரசு கோரிக்கை வைத்தால், தினமும் தேவையான அளவு தண்ணீர் தர தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
22-ஜூன்-201914:55:16 IST Report Abuse

Vittal Anandகேரளா இப்போது தண்ணீர் கொடுத்தால் முல்லைப்பெரியாறு தண்ணீர் கணக்கில் கலைத்துக்கொள்வார்களோ என்று பயமோ ?

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-ஜூன்-201923:29:34 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamதிமுக கூட்டணியின் சகுனி விளையாட்டு. திமுக எப்போது பலமிழக்கிறதோ, அப்போதுதான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்.

Rate this:
jagan - Chennai,இலங்கை
21-ஜூன்-201920:17:48 IST Report Abuse

jaganபம்ப் செட்டு வைத்து நீர் மழை நீர் வெளியேற்றுவதை நிறுத்த கோர்ட் மூலம் தடை உத்தரவு பெறவேண்டும். ஒரு ஒரு முறை மழை பெய்யும் போதும் , ஏரி, குளம் இவற்றில் வீடு கட்டியவர்கள் வரும் தண்ணீரை பம்ப் செட் மூலம் வெளியேற்றி தேங்க விடாமல் செய்கிறார்கள் (கடல் வரை விரட்டி விடுகிறார்கள்). எனவே கோர்ட் மூலம் அந்த முறைக்கு தடை வாங்கி, பொது மக்கள்/ ஆர்வலர்கள் இது போன்று நடக்காமல் கண்காணிக்க வேண்டும் (நம்ம போலீஸ் பத்தி நமக்கு தெரியாதா) ...... அமெரிக்கா போன்ற நீர் மிகை நாடுகள் கூட மழை நீர் தேங்குவதை வெளியேற்றுவது இல்லை, அங்கேயே குட்டை அமைத்து (man made Retention pond எல்லா அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸிலும் உண்டு)

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X