சர்வதேச யோகா தினம்:வாழ்வை உயர்த்தும் உன்னதம்

Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 சர்வதேச யோகா தினம்:வாழ்வை உயர்த்தும் உன்னதம்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஐந்து அறிவு உடைய உயிரினங்களைவிட ஆறு அறிவு படைத்த மனிதனால் மட்டுமே இவ்வுலக அற்புதங்களை அனுபவிக்க முடிகிறது. வாழும் நாட்களில் நோயற்ற வாழ்வை பெறுவது மிகவும் இன்றியமையாததாகிறது.
மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. உடலில் பஞ்ச பூதங்களின் அளவு சரிவிகிதத்தில்
அமைந்தால் நாம் நினைப்பதை இயக்கும் கருவியாக உடல் மாறும். இந்த பூத உடலை பாதுகாக்க வழிமுறைகள் பல இருப்பினும் யோகமுறை மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்தவர் நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். 177 நாடுகளில் நாடுகளின் ஒப்புதலுடன் 2015 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காஇ சீனா போன்ற வளர்ந்த நாடுகள் யோகாவை நினைவு கூறும் தினத்தை மிக ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டனர்.
நாகரீகம் தோன்றிய காலத்தில் யோகா தோன்றியதற்கு சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த யோக ஆசன நிலையில் இருக்கும் முத்திரைகளே சான்று. இருப்பினும் முறையான யோக கலையை தந்தவர் பதஞ்சலி முனிவர்.மகாவீரரும் புத்தரும் யோகத்தின் சிறப்பினை அவரவர் கொள்கைகளின் மூலம் எடுத்தியம்பியவர்கள் ஆவர். யோகா என்ற சொல்லிற்கு ஒன்றிணைத்தல் என்பது பொருள்.
மனிதனுக்கும் இயற்கைக்குமான நல்ல உறவை ஏற்படுத்துவதும்இ நம்மை உணர்ந்து இறைவனை அடைவதும் இதன் நோக்கமாகும்.யோக கலை நம் நிலையை உயர்த்திஇ நம்மை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கும் தன்மை பெற்றது. நம் உள்ளத்தே இருக்கும் இறைவனை காணச் செய்யும் வல்லமை பொருந்தியது.யோகா செய்வதன் மூலம் வாழ்வில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிதானமாக ஆராய்ந்து அறிய முடிகிறது. மேலும் இனி நடக்கப் போவதற்கு தெளிவான முடிவினை எடுக்கும் திறனையும் பெற இயலுகின்றது.

மனிதனுக்கு அதிக ஆற்றலைத் தருவது யோகா. நல்ல எண்ணங்களை மட்டுமே நம்மில் விதைக்க அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு மனிதனின் புறத்தோற்றத்தை அழகாக்குகிறது.
மனதில் உதிக்கும் எண்ணங்களை முழுமையாக பரிசோதனை செய்துஇ ஒரு நடுநிலை வாழ்க்கை வாழ உதவுகிறது. மனித உடம்பின் உணர்வின் உள்நோக்கிய பயணமே யோகா.
நம்முள்ளே நாம் பயணிக்கும்போது நம்பிக்கை வலுக்கிறது. பணியில் ஈடுபாடுஇ செயலில் வேகம்இ பேச்சில் உற்சாகம்இ நடையில் கம்பீரம்இ எண்ணத்தில் சிகரம் தொடும் தீரம் கொடுப்பது யோகா.

தன்னைச் சூழ்ந்து இருப்பவர்களை நற்பாதையில் எடுத்துச் செல்லும் கரம் யோகா. மனிதர்களுக்கு இறப்பு உறுதியானது. யோகாவை கடைப்பிடிப்பவருக்கு நோயற்ற வாழ்வு நிரந்தரமானது.உடல் மற்றும் ஆன்மீகத்தை வளர்ப்பது யோகா என்பார் பான் கீ மூன் ஐக்கிய நாடு சபையின் முன்னால் தலைவர். யோகாவை உலகளாவிய அளவில் பறைசாற்றஇ உலக சுகாதார அமைப்பு இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதுஇ இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்திற்கு கொடுக்கப்படும் கௌரவம்.

19 ஆம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தரின் ராஜயோகம் பற்றிய கருத்துக்கள்இ அமெரிக்காவின் ஆன்மீகவாதிகளின் பைபிள் ஆயின. மனிதனின் வாழ்நாளை குறைத்திடும் தேவையற்ற மன அழுத்தத்தை நீக்கிஇ அவர்களின் திறமை மற்றும் திறனை அதிகப்படுத்துவது யோகா.யோகா செய்வதால் உடம்பின் அனைத்து இணைப்புகளும் வலுப்பெற்றுஇ ஒவ்வொரு சுரப்பியும் சரியான முறையில் செயலாற்றிஇ மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
ஆதலால் யோகாவை ஏற்றுக் கொண்ட சீனாஇ சீன இந்திய யோகா கல்லூரியைஇ குன்மிங்கில் நவம்பர் 13இ 2015 ஆம் ஆண்டில் திறந்தது.

உடற்பயிற்சி செய்தால் உடல் நலம் பெறும். மனப் பயிற்சி செய்தால் வாழ்க்கை வளமாகும். உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதே யோக கலை.நாம் வாழும் பூமியின் ஆழத்தை அறிந்து விட்டோம். நம்மை சுற்றி இருக்கும் அண்டவெளி அனைத்தையும் கண்டுபிடித்துஇ அதில் நிறைவு காணாதுஇ மேலும் கண்டுபிடிப்பில் இறங்கிவிட்டோம். இதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பது கணினி தொழில்நுட்பம்.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டுஇ தன் வாழ்வை முழுவதுமாக கணினி நிறுவனமான ஆப்பிளில் செலவிட்டுஇ பேரும் புகழும் பெற்றவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். “நீ நீயாக இருஇ நீ நீயாக மட்டுமே இரு” என்பது ஸ்டீவ்வின் வரிகள். மனிதர்கள் எப்பொழுதும் அவர்களாகவே இருப்பதில்லை. மாறாக பிறரின் எண்ணங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். பொருளிலும் புகழிலும் மயங்கிக் கிடக்கின்றனர்.

உலக வாழ்வில் எந்த உயரத்தை தொட விரும்புகின்றோமோ அதனை முயற்சி செய்தால் தொட்டு விடலாம். ஆனால் நோய் ஒன்று தொற்றிக் கொண்டால்இ சம்பாதித்தது அளவிற்கு மிஞ்சியதே ஆனாலும் பயன்தராது.“எனது நோயை சுமக்க எனது பணத்தைக் கொண்டுஇ என்னால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகள்இ வாழ்வின் கொடூரம் நோய் என்பதைப் புலப்படுத்தும்.

யோகா நோயினை குறைப்பது குறைப்பதாக உலக சுகாதார அமைப்பு எடுத்துரைக்கிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உடல் ஆரோக்கியமாக இருந்தால்இ அனைத்து செல்வத்தையும் பெற்று விடலாம்.உடல் நலம் பெற்றும்இ புற காரணிகளால் வேதனை அடைந்துஇ மது பழக்கத்திற்கு ஆளாகிஇ தன் உடம்பை கொடுப்பது மட்டுமல்லாமல் வாழ்வையும் சிதைப்பவர்கள் பலர். அதற்கு காரணம்இ ஒரு துன்பத்திற்கு தீர்வு காண தெரியாத தன்மையே!

உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. நாம் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வெளியில் நடப்பவற்றை நம்மால் எப்பொழுதும் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க இயலாது. ஆனால் நம்மை நாம் எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.காலத்தின் அருமையை உணர வைப்பது யோகா. பலர் நேரம் போதவில்லை என்பார்கள். சிலர் எத்தனை வேலைகள் இருந்தாலும் சரிஇ அதனை சரியாக முடிப்பர். யோகா செய்தால் அதிக நேரம் கிடைத்துஇ வேலையை விரைவாக முடித்த திருப்தி கிடைக்கும்.

மிக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு உடம்பை பாதுகாக்க வழி தேடுகின்றனர் அதிகமான மனிதர்கள். உண்மையில் யோகாவிற்கு எண்ணமும்இ உடம்பும் போதும்இ நினைத்து உடம்பை பெற்றுவிடலாம்.

இளைய சமுதாயமே!

வாழும்போதேஇ வாழும் கலையை அறிந்து வாழ்ந்திடு! சுவர் இருந்தால் சித்திரம் வரையும் முடியும் என கேட்டிருப்பாய்!இ உள்ளமும்இ உணர்வும் சொல்வதை உடம்பு கேட்டால்தான்இ நீ உயரே பறந்திடுவாய்! இனிதாய் வாழ்வை இன்றே தொடங்கிட யோகாவை உன் கையில் எடு! வாழ்வோம்! அனைவரையும் வாழ வைப்போம்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramananda Devasahayam - tirunelveli,இந்தியா
21-ஜூன்-201912:37:26 IST Report Abuse
Paramananda Devasahayam அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது போல் யோக ஜாதி மத இனத்திற்கு அப்பாற்பட்ட்து என்ற கருத்தை நன் மட்டும் அல்லலை ஒவ்வொரு கிறிஸ்தவனும் , மஹமதி யனும் மறுப்பான்,. ஏன் என்றால் சூரியனை நமஸ்காரம் செய்வது மத சட்ட்திற்கு புறம்பானது சூரியனை நமஸ்காரம் செய்ய முடியாது , சூரியனை படைத்த கடவுளை மட்டுமே நமஸ்கரிப்போம் என்பதை அமைச்சர் களும் பிறரும் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். அதற்கு பதிலாக சூரியனை நோக்கி பார்க்காமல் பொதுவான இறைவணக்கம் m என்றிருக்குமானால் ஒருவேளை ஏற்றுக்கொள்ள ஏற்புடையதாகும் என்பதை சம்பத்தபடட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன், எனவே கிறிஸ்தவ இஸ்லாமிய குழந்தைகளை சூரிய நமஸ்காரம் செய்ய வற்பறுத்துவது ஏற்புடையது அல்ல அதினால் கல்வியில் எந்த பாதிப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது இது நாட்டின் மத உரிமைக்கு எதிரான ஒரு ஒழுங்கு நடைமுறை ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஜூன்-201912:09:10 IST Report Abuse
ganapati sb புதிய கல்வி கொள்கையில் வருவதுபோல பள்ளி பருவத்திலேயே யோகா கலையை மாணவர்களுக்கு கற்று தந்திட வேண்டும் அப்போது மாணவர்கள் அரோக்யமாக உடல்நலமும் பக்குவமான மனநலமும் யோகத்தால் இணையப்பெற்று உறுதியான பாரதத்தை உருவாக்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X