பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானுடன் பேச்சு: மத்திய அரசு மறுப்பு

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: 'பாகிஸ்தான் அரசுடன் மீண்டும் அமைதி பேச்சு நடத்த, இந்தியா தயாராக உள்ளது' என, பாக்., பத்திரிகையில் வெளியான தகவலை, மத்திய அரசு மறுத்துள்ளது.






அண்டை நாடான, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிகையில், 'பாக்., அரசுடன் அமைதி பேச்சு நடத்த, இந்தியா, தயாராக உள்ளது. பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் மோடி, இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்' என, சமீபத்தில் செய்தி வெளியானது. இதை, மத்திய அரசு, திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு, பாக்., பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி, பதில் தகவல் அனுப்பினார். அதில், 'பாகிஸ்தான் உள்ளிட்ட, அனைத்து அண்டை நாடுகளுடனும், நட்புறவுடன் இருக்கவே, இந்தியா விரும்புகிறது. ஆசிய பிராந்தியத்தில், பயங்கரவாதமற்ற சூழலை ஏற்படுத்த, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.





இது, வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக, வழக்கமாக எல்லா தலைவர்களும் மேற்கொள்ளும் நடைமுறை தான். இந்த தகவலை அடிப்படையாக வைத்துத் தான், பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமைதி பேச்சை துவக்குவதாக, நம் தரப்பில், எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Boopathi. S -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூன்-201916:12:32 IST Report Abuse
Boopathi. S பாகிஸ்தானை சுத்தம் செய்து நமது மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
21-ஜூன்-201908:45:34 IST Report Abuse
G.BABU பாகிஸ்தான் அரசின் உயர் மட்டத்தை சேர்ந்தவர்களும் ....பாகிஸ்தான் ஊடகங்களும் இந்தியாவுடன் ஓர் பேச்சுவார்த்தைக்கு மறைமுகமாக மன்றாடுவது அப்பட்டமாக தெரிகிறது.....காரணம் எமக்கும் புரிகிறது
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201907:56:30 IST Report Abuse
லிவிங்ஸ்டன் இங்கிருக்குற பாக்கி அடிவருடிகளின் கருத்துக்களை அறிய ஆவல்.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-201914:00:51 IST Report Abuse
uthappaஅதுவும் தமிழ் நாட்டில்தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. அவிங்க மொழியும் இவிங்களுக்கு தெரியாது ஆனாலும் மத பாசம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X