மோடி விருந்து: லாலு, மாயா புறக்கணிப்பு

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி : பார்லி., உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



latest tamil news


லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு டில்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் இன்று (ஜூன் 21) இரவு விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி. இந்த விருந்தில் 750 க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பார்லி., விவகாரத்துறை அமைச்சகத்தால் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. காங்., திமுக, ஆம்ஆத்மி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும் பா.ஜ., எம்.பி.,க்களுடன் இணைந்து இந்த விருந்தில் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news


ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் இந்த விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் முஷாபர்நகரில் மூளைக்காய்ச்சலால் 118 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு போராட்டம் நடத்தும் வகையில் இந்த விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொண்டால் தங்களின் உணவிற்கு ஆகும் செலவு தொகையை பீகாரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூன்-201922:39:00 IST Report Abuse
padma rajan எதற்கு இந்த விருந்து கொடுக்கும் கலாச்சாரம் அவர்கள் இல்லாத பட்டவர்களா அல்லது சோத்துக்கு அலைபவர்களா? யார் வீட்டுக் காசில் யாருக்கு விருந்து. அனேகமாக மோடி தன்னுடைய சொந்த செலவில் விருந்து கொடுப்பார் என்று நம்புகிறோம்.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
21-ஜூன்-201918:56:34 IST Report Abuse
SaiBaba மக்களுடன் கூட்டணி என்று சொல்லிவிட்டு மோடி எதற்காக கண்டவர்களுக்கும் விருந்து கொடுக்கிறார்? அரசு செலவழிக்கும் ஒவ்வொரு காசும் மக்களின் நலனுக்கே போய்ச்ச்சேர வேண்டும். மக்களின் தலைவன் என்று ஆன பின்னால் இனி மக்களை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுங்கள் மோடி அவர்களே.
Rate this:
Cancel
Guna Ravichandran - Namakkal,இந்தியா
21-ஜூன்-201918:08:55 IST Report Abuse
Guna Ravichandran இதெல்லாம் யார் ஊட்டுப் பணம்??
Rate this:
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
21-ஜூன்-201920:35:33 IST Report Abuse
இந்திய  புலிஇந்த கேள்வியை உங்க ஏரியா கவுன்சிலரைப் பார்த்துக் கேட்டு இருந்தால் தண்ணீர் பிரச்சினை கொஞ்சம் குறைந்து இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X