மோடி விருந்து: லாலு, மாயா புறக்கணிப்பு| Dinamalar

மோடி விருந்து: லாலு, மாயா புறக்கணிப்பு

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (17)

புதுடில்லி : பார்லி., உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.





லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு டில்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் இன்று (ஜூன் 21) இரவு விருந்து அளிக்கிறார் பிரதமர் மோடி. இந்த விருந்தில் 750 க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பார்லி., விவகாரத்துறை அமைச்சகத்தால் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. காங்., திமுக, ஆம்ஆத்மி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும் பா.ஜ., எம்.பி.,க்களுடன் இணைந்து இந்த விருந்தில் பங்கேற்க உள்ளனர்.




ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் இந்த விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் முஷாபர்நகரில் மூளைக்காய்ச்சலால் 118 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு போராட்டம் நடத்தும் வகையில் இந்த விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொண்டால் தங்களின் உணவிற்கு ஆகும் செலவு தொகையை பீகாரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X