பொது செய்தி

தமிழ்நாடு

ஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (67)
Advertisement

சென்னை : நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.5,52,73,825 கடன் பெற்றுள்ளனர். இதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தவில்லை. இதனால் வங்கி சட்டத்தின் படி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவிற்கு சொந்தமான சொத்துக்களை, வரும் ஜூலை 26ம் தேதி ஏலம் விட இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.


இதற்கான விஜயகாந்த்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் அது சார்ந்த டிரெஸ்ட்கள் மற்றும் இவருக்கு சொந்தமான இன்னும் பல சொத்துக்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளது. மொத்தமாக ரூ.100 கோடி அளவுக்கு ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


சட்ட ரீதியாக சந்திப்போம்


இந்த விவகாரம் தொடர்பாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் கடனில் சிக்கியுள்ளன. அதிகளவில் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. நாங்கள் கல்லூரி துவங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. இடையில், விரிவாக்கத்திற்காக கடன் வாங்கினோம். ரூ.5 கோடி கடன் பாக்கி உள்ளது. கடனை அவ்வபோது திருப்பி செலுத்தினோம். மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதனால், கடனை செலுத்த அவகாசம் கேட்டோம். ஆனால், வங்கி நிர்வாகிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம். ஜூலை 26 வரை அவகாசம் உள்ளது. அதற்குள் தீர்வு காணப்படும். கல்லூரியை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறோம். விஜயகாந்த் சினிமாவில் நடிக்காததாலும், திருமண மண்டபம் இடிக்கப்பட்டதாலும் வருமானம் இல்லை. இளைய மகன் தற்போது நடிக்க துவங்கியுள்ளார். மூத்த மகன் தொழில் துவங்கியுள்ளார். கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம். தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் கடனில் சிக்கியிருந்தாலும், எங்களது கல்லூரி என்பதால், வெளியே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201919:12:43 IST Report Abuse
Swamidoss சேவை மனைப்பான்மையுடன் ஹா ஹா ஹா ஹஹஹஹஹ
Rate this:
Share this comment
Cancel
Karun Muruga - banglore,இந்தியா
26-ஜூன்-201914:41:18 IST Report Abuse
Karun Muruga ஒரு மூணு முடுச்சல முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி...... பிரேமா ..சுதீஷ் ...பெரியபையன் மூவரும் விஜயகாந்த் தோல்விக்கு காரணம் பாவம் முடியாத நிலைமையில்..இப்படி
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
25-ஜூன்-201903:09:24 IST Report Abuse
arabuthamilan ஒருவேளை இவரு நின்ன நான்கு தொகுதியிலும் ஜெயிச்சிருந்தா இந்த நாடகம் நடத்த வேண்டிய அவசியமே வந்திருக்காது. எல்லாம் அந்த பிரேமா ரகசியம். வாங்கின முன்னூறு கோடியும் அதற்குள்ளாக செலவழிந்து விட்டதா? நம்ப முடிய வில்லையே. இந்தம்மா மறைந்த ஜெயலலிதாவை காட்டிலும், சிறைப்பறவை சசிகலாவை காட்டிலும் அதிக மூளை படைத்தவர். அதனால் தமிழக மக்களே இவர்களை நம்பாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X