காலை முதல் மாலை வரை அமித்ஷா ‛பிசி'

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி : விடுமுறை இன்றி, அதிக நேரம் உழைக்க வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை தான் கடைப்பிடிப்பதுடன், தனது அமைச்சக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளார் புதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.latest tamil news


அமித்ஷா, காலை 9.30 மணியிலிருந்து 9.45 மணிக்குள் அலுவலகம் வந்து விடுவார். காலை 10 மணிக்குள் மூத்த அதிகாரிகளுடன் விரிவாகி ஆலோசிப்பார். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவே அலுவலகத்தில் இருந்து புறப்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.அமித்ஷாவின் இந்த நடவடிக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நினைவுபடுத்துவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த 2008 டிசம்பர் முதல் 2012 ஜூலை வரையிலான காலகட்டத்திலேயே இந்த முறைகளை அறிமுகப்படுத்தினார். சிதம்பரம், காலை 9 மணிக்கே அலுவலகத்திற்கு வந்து விடுவார். காலை 9.30 மணிக்கே அதிகாரிகளை சந்திக்க தயாராகி விடுவார். தான் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே அதிகாரிகள் நார்த் பிளாக்கில் தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.


latest tamil news


மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அமித்ஷா ஒழுக்கத்துடன் கண்டிப்பானவர். நேரம் தவறாதவர். சிதம்பரத்தை போல் கடுமையாக உழைக்கக் கூடியவர். நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அமித்ஷா. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் விவகாரங்களை கவனிக்கும் செயலாளர்கள், இணை செயலாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவுகளின் தலைவர்கள், ரா அதிகாரிகள் ஆகியோருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்து வருகிறார் என்றார்.
தனது இரு இணையமைச்சர்களான ஜி.கே.ரெட்டி மற்றும் நித்தியானந்த ராய் ஆகியோரும் இரவு 7 மணி வரை அலுவலகத்திற்கு இருக்க வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். அவர்களும், அமித்ஷா புறப்பட்டு சென்ற பிறகே, அலுவலகத்தில் இருந்து புறப்படுகிறார்கள்.
தொடர்ந்து கூறிய அதிகாரி, பெரும்பாலான வார இறுதி நாட்களிலும் அமித்ஷா அலுவலகம் வந்து விடுவார். அவர் வரும் போது, உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்த போது பகல் உணவிற்காக வீட்டிற்கு சென்று விடுவார். பெரும்பாலான வேலைகளை பகல் உணவிற்கு பிறகே செய்வார். அரசியல் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை அவர் வீட்டிலேயே வைத்துக் கொள்வார்.


latest tamil newsஆனால் அமித்ஷா, பகல் உணவை வீட்டில் இருந்தே எடுத்து வந்து விடுவார். அனைத்து ஆலோசனை கூட்டங்களையும் அலுவலக அறையிலேயே நடத்துகிறார் என்றார். சிதம்பரம் மற்றும் அமித்ஷாவின் பணிகளையும் செயல்பாடுகளை ஒப்பிட்டு மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி கூறுகையில், சிதம்பரம், அரிதாகவே இரவு 7 மணிக்கு முன்பு அலுவலகத்தில் இருந்து புறப்படுவார். அதுவரை மூத்த அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பார்.
உளவு துறை அமைப்புக்களுடன் ஆலோசனை நடத்துவதை தனது தினசரி பணியாக வைத்துள்ளார் அமித்ஷா. பயங்கரவாதத்தை சகித்து கொள்ள முடியாது எனவும், ஒவ்வொரு குடிமகனின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புவதாகவும் கூறுவார் என்றார்.

பணி நடைமுறையில் பல நவீன முறைகளை கொண்டு வந்தவர் சிதம்பரம். அனைவருக்கும் வருகை பதிவேடு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பயோமெட்ரிக் முறை உள்ளிட்டவற்றை கொண்டு வந்தவர் சிதம்பரம் தான். பணியாளர்கள் அலுவலகம் வரும் நேரத்தையும், வெளியேறும் நேரத்தையும் கணக்கிட எலக்ட்ரானிக் கருவி மூலம் கைரேகை மூலம் அறியும் முறையை கொண்டு வந்தவர்.
காலை 9 மணிக்கு பிறகு அலுவலகம் வருவதும், மாலை 5.30 மணிக்கு முன்பு அலுவலகத்தில் இருந்து புறப்படுவதை விடுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை சிதம்பரம் தான் பிறப்பித்தார். பல பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பயோமெட்ரிக் முறையை தான் பின்பற்றுவதை போல், பிறரும் கடைபிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் என்கிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVARAM - Kochi,இந்தியா
26-ஜூன்-201906:40:05 IST Report Abuse
SIVARAM But crimes in India increased after Shah became HM
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூன்-201918:01:56 IST Report Abuse
RajanRajan அந்த பிக்பாகெட் உழைப்பு சுயநலம் சார்ந்தது. கேடுகெட்ட அதை இங்கே இணையாக பேச வேண்டாம்.
Rate this:
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
24-ஜூன்-201917:08:37 IST Report Abuse
Vmmoorthy Moorthy இந்தியாவில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் வாங்கிய சம்பளத்திக்கும் கிம்பளத்திக்கும் உழைக்கிறார்கள் என்பதே அதிசயம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X