பொது செய்தி

இந்தியா

தண்ணீர் இல்லை : திருமணம் இல்லை

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

சிகர் : தண்ணீர் இல்லாத கிராமங்களின் இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள இளம் பெண்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே நிச்சயம் செய்த பெண் வீட்டினரும், திருமணத்தை நிறுத்தி வருகின்றனர்.



latest tamil news


ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் உள்ளது கீரோ கி தானி கிராமம். இந்த கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தண்ணீருக்காக இப்பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் அமைந்துள்ள கிணற்றினை நம்பியே உள்ளனர்.
தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், இந்த கிணற்றில் உள்ள நீர், சிறு ஓடை போன்று மாறி உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து இதில் வரும் நீரை சேகரித்து அக்கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


latest tamil news


தண்ணீர் பிரச்னை தற்போது இந்த கிராம இளைஞர்களின் திருமணத்தை கேள்வி குறியாக்கி உள்ளது. தண்ணீர் இல்லாத சூழலில் இந்த கிராம இளைஞர்களை தங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாது என இளம்பெண்கள் கூறி வருகின்றனர். பெண் வீட்டார் யாரும் இந்த கிராம இளைஞர்களுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து வர முன் வரவில்லை. நிச்சயமான திருமணங்களையும் சில பெண் வீட்டார், ரத்து செய்து வருகின்றனர்.


latest tamil news


அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் தண்ணீர் இல்லாத ஒரே காரணத்தால் திருமணங்கள் பாதியில் நிற்பதாக இப்பகுதி இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஜூன்-201920:13:48 IST Report Abuse
Natarajan Ramanathan நான் தேவகோட்டையில் இருந்தவரை தினம் பத்து குடம் தண்ணீர் எடுத்துவந்த பிறகுதான் காலேஜ் போவேன். இதனால் உடலும் வலுவானது. (ஆனால் இப்போது அங்கு தண்ணீர் பஞ்சம் இல்லை)
Rate this:
Cancel
thiru - Chennai,இந்தியா
21-ஜூன்-201918:12:21 IST Report Abuse
thiru சென்னையில் அந்த நிலைமை வந்தாச்சு.. கடனாக பணம் வாங்கிடலாம் .. தண்ணீர் வாங்க முடியாது.. வாழ்க தமிழ்..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜூன்-201918:01:29 IST Report Abuse
தமிழ்வேல் அடுத்த தேர்தல் வாக்குறுதி. ரேஷன் கடையில் வாரம் இருமுறை "ஒருவருக்கு ஒரு குடம் நீர்" தரப்படும் =சுடலை. போர்வெல் கடன் தள்ளுபடி= பப்பு. கிராமத்து அனைத்துக்கிணறுகளும் காவிரியுடன் இணைக்கப்படும்= மோடிஜி. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X