முத்தலாக் மசோதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்| Dinamalar

முத்தலாக் மசோதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (25)
Share

புதுடில்லி : முத்தலாக் மசோதா, 16 வது லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையே நிறைவேற்றப்பட்ட போதிலும், ராஜ்யசாபாவில் பா.ஜ.,விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் காலாவதியானது.

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாப்பதற்கு வழிவகை செய்யும் முத்தலாக் தடை சட்ட மசோதா, புதிதாக இன்று(ஜூன் 21) மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்., உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு குரல்களை எழுப்பி உள்ளன.latest tamil news

எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் : 10 அம்சங்கள்


1. முத்தலாக் தடை சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய காங்., எம்.பி., சசிதரூர், ஒரே மாதிரியான சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். அதை விடுத்து இஸ்லாமிய ஆண்களை மட்டும் குறிவைக்கும் விதமாக சட்டம் கொண்டு வரக்கூடாது. மற்ற மதங்களை சேர்ந்த ஆண்களும் தங்களின் மனைவிகளின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். இந்த மசோதாவில் நடைமுறை பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை. இது முற்றிலும் பாரபட்சமான மசோதா என்றார்.

2. கடந்த மாதம் 16 வது லோக்சபா கலைக்கப்பட்டதால், ராஜ்யசபாவில் நிலுவையில் இருந்த முத்தலாக் சட்டம் காலாவதியானது. கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவின்படி, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்கிறது.

3. ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்த மசோதாவை பார்லி., தேர்வு குழுவிடம் அனுப்பி திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க அரசு மறுத்து விட்டது.


latest tamil news
4. இன்று புதிதாக முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது பா.ஜ., கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை.

5. இன்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

6. காங்., உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முத்தலாக் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டன.


latest tamil news
7. இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவும், அவர்களுக்கும் சமஉரிமை வழங்குவதற்குமே இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்த பிறகும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து விட்டன.

8. சட்ட ரீதியான ஒப்புதல் பெறாமலேயே அவசர சட்டமாக மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியதுடன், 2 முறை புதுப்பித்துள்ளதாகவும், கட்டாயமாக திணிக்கும் வகையிலான இந்த மசோதா ஏற்கனவே காலாவதியான மசோதாவின் நகல் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

9. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் சில பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க வழிவகை செய்யும் உள்ளிட்டவைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10. 17 வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற படாமல் நிலுவையில் இருக்கும் முத்தலாக் உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் சட்டமாக நிறைவேற்றப்படாவிட்டால், அவை காலாவதியாகி விடும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X