முறிகிறதா காங் - மஜத கூட்டணி ?

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (11)
Advertisement

பெங்களூரு : கர்நாடகாவில் இன்னும் எத்தனை காலம் இந்த அரசு காலம் தள்ள போகிறது என எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நிறுவனருமான தேவகவுடா கூறி உள்ளார். அவரது இந்த பேச்சுக்கள் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் விரிசல் அதிகரித்து, முறியும் நிலைக்கு வந்து விட்டதையே காட்டுகிறது.







செய்தியாளர்களிடம் பேசிய தேவ கவுடா, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு இன்னும் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க போகிறதோ எனக்கு தெரியவில்லை. காங்.,ன் முடிவை பொறுத்தே அது உள்ளது. விரைவிலேயே கர்நாடகாவில் தேர்தல் வரலாம். கூட்டணியை நல்ல முறையில் கொண்டு செல்லவதற்கு தேவையான அனைத்தையும் குமாரசாமி செய்து வருகிறார். காங்.,க்காக நாங்கள் ஒரு அமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளோம்.






இந்த ஆண்டு மத்தியிலேயே தேர்தல் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தருவதாக அவர்கள் கூறினார்கள். தற்போது அவர்கள் நடந்து கொள்வதை நீங்களே பாருங்கள். எங்கள் கட்சியினர் மிக கண்ணியமாக நடந்து வருகின்றனர் என்றார்.

காங்., தலைவர் ராகுலை சந்தித்த சித்தராமைய்யா, கட்சியின் வளர்ச்சியை மஜத உடனான கூட்டணி பாதித்து வருவதாக கூறிவிட்டு வந்துள்ள நிலையில் தேவகவுடா இவ்வாறு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவகவுடாவின் இந்த வார்த்தைகள் குறித்து முதல்வரும் அவரது மகனுமான குமாரசாமியிடம் கேட்ட போது, எனது தந்தையின் வார்த்தைகளை மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. எனது தலைமையிலான அரசு தனது முழு ஆட்சி காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-201904:03:37 IST Report Abuse
J.V. Iyer நித்ய கண்டம், பூர்ண ஆயுசு
Rate this:
Share this comment
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூன்-201920:52:46 IST Report Abuse
padma rajan இப்போது இது தான் முக்கியமான பிரச்சனையா. தமிழ்நாட்டுக்கு நியாயமான தண்ணீர் பங்கீட்டு வாங்கிக்கொடுப்பதற்கு கர்நாடக அரசை நிர்பந்தம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும். முத்தலாக் மசோதாவை நிறைவேற்றினால் அதில் உங்களுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. முக்கியமான பிரச்சினைகள் இருக்கும்போது இது இப்போது தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
21-ஜூன்-201918:27:55 IST Report Abuse
bugindia கர்நாடகா மாநிலத்திலும் இந்த தில்லு முல்லு கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட சீமான் அவர்களைப் போல ஒரு அரசியல் கட்சி தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X