அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினமும் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருமா ? முதல்வர் இபிஎஸ்

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement

சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என முதல்வர் இபிஎஸ் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.latest tamil news
தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் இபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் : பருவ நிலை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை போக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சராசரி மழை மிக குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.


சென்னையை சமாளிக்கும் திட்டம்


சென்னைக்கு முடிந்த அளவுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம்.செங்குன்றம், செம்பரம்பாக்கம், பூண்டி ,சோழவரம் ஆகிய 4 ஏரிகளும் வறண்டு போய் விட்டன. 2018 ம் ஆண்டு 3 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது தண்ணீர் கையிருப்பு இல்லை. சென்னை நம்பியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை . கிருஷ்ணா நீரும் கிடைக்கவில்லை. இருப்பினும் தடை இல்லாமல் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். கடல் நீர் மூலம் குடிநீராக்கும் திட்டம் , நிலத்தடி நீர் மற்றும் குவாரிகளில் இருந்து பெறப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.


latest tamil news
ஏரியில் தண்ணீர் இல்லாத காரணதத்தினால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்கென ரூ.65 கோடி ஒதுக்கி உள்ளோம். 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படும். இது போல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம். சென்னை மாநகர் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். அதிகாரிகள் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு கூடுதல் லாரி மூலம் தண்ணீர் வழங்க ஆலோசனை வழங்கி உள்ளோம்.

கேரளாவில் இருந்து தண்ணீர் கிடைத்தால் பிரச்னையை மேலும் சமாளிக்கலாம். கேரளா தண்ணீர் தருவதாக கூறி இருப்பதை வரவேற்கிறோம். நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால் நல்லது. தர முடியுமா என்று கேட்டு கடிதம் எழுத உள்ளோம். குடி நீர் பிரச்னையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


கூடுதல் நிதி

இதனிடையே, தமிழகத்தில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னைக்கு, தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஏற்கனவே ரூ.700 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜூன்-201904:32:55 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நீராவியாகி போயிட்டு பிறகுமலையாகோட்டும் என்று அறுபள்ளிகளிலே படிச்சோம் இன்று நீராவியாகபோகவே வலி இல்லீங்களே அப்பறமா மழை எப்படீங்க கொட்டும் . பிளாட்போட்டிருமந்திரிதோ ப்ரோக்கர்வரை கோடீளேபரக்க மக்கள் என்ற அப்பாவிகள் வோட்டுப்போட்ட பாவத்துக்கு காலிக்குடங்களை தூக்கிண்டு திரியுதுங்க சென்னைமட்டும் இல்லீங்க 89%தமிழ்நாடும் அவதியேதான் பட்டுண்டு தவிக்குறாங்க
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
22-ஜூன்-201913:25:24 IST Report Abuse
narayanan iyer தண்ணீர் வறண்டுபோன ஏரிகளை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் மழைவருமுன் பட்டா போட்டு விற்று விடுவார்கள் . இப்பவே மடிப்பாக்கம் பாலாஜி நகரில் இருந்த சிறிய ஏரியில் தண்ணீர்போய்விட்டது வீடு கட்ட பிளான் பண்ணி மண்ணும் கல்லும் போட்டு மனையை ரெடி பண்ணுகிறார்கள் . அரசு விழித்திருக்க வேண்டிய கட்டாயம் .
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-201901:02:46 IST Report Abuse
Matt P அப்படியே நிரந்தர தீர்வுக்கும் வழி காணுங்கப்பா ..மழை எல்லாம் சொல்லிக்கிட்டு வறதில்லை .சில நேரங்களில் நீளமா ஒய்வு எடுத்து கொள்கிறது ...இல்லாவிட்டால் உலகின் வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்று விடுகிறது நமக்கு துன்பத்தை கொடுத்துவிட்டு ...ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்களாகவும் இருங்கள் பொறுப்பு உணர்ச்சியோடு செயல்படுங்கள் .நல்லோர் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X