யோகா தினத்திலும் அரசியல்

Updated : ஜூன் 21, 2019 | Added : ஜூன் 21, 2019 | கருத்துகள் (13)
Advertisement
politics,International Yoga Day யோகா, அரசியல், பா.ஜ.,

புதுடில்லி: உலக அளவில் இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், அதில் அரசியல் கலந்துள்ளது. யோகா தினத்தை பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் பாணியில் யோகா தினத்தை கொண்டாடின.

நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஜார்க்கண்ட், அரியானா, மஹாராஷ்டிராவில், இந்த ஆண்டு பிற்பகுதியிலும், டில்லி சட்டசபைக்கு 2020 ஜனவரி - பிப்., மாதத்திலும் நடக்க உள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு, இந்த மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ., ஆட்சி செய்யும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், நகரத்திலிருந்து, கிராமம் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கும் யோகாவை கொண்டு செல்ல முயற்சி எடுக்க வேண்டும். மதம், ஜாதி, பாலினம் ஆகியவற்றை விட யோகா மேலானது எனக்கூறினார்.


பா.ஜ., ஆட்சி செய்யும், ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கட்டாரும் பங்கேற்றார்.
Advertisement


பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி செய்யும், மஹாராஷ்டிராவில் நடந்த யோகா தின விழாவில், முதல்வர் தேவேந்திர பட்நாவீசுடன், யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார்.

டில்லியில், நடந்த யோகா தின விழாவில் ஏராளமான பா.ஜ., தலைவர்கள் பங்கேற்றனர். ராஜ்பாத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், பா.ஜ., எம்.பி., மீனாட்சி லேகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டில்லியில் லோதி பூங்கா பகுதியில், நடந்த யோகா தின விழாவில், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டனர்.


புராரி என்ற இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பங்கேற்றார்.


ஷதாரா என்ற இடத்தில் உள்ள யமுனா விளையாட்டு மைதானத்தில் நடந்த யோகா தின விழாவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு டில்லி பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீர் பங்கேற்றனர்.
பார்லிமென்ட் வளாகத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பா.ஜ., பொது செயலர் பூபேந்திர யாதவ் பங்கேற்றனர்.

பா.ஜ., தேசிய அலுவலகம் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், கட்சியின் செயல் தலைவர் நட்டா தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது.


பா.ஜ., அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சர்வதேச யோகா தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் யோகா தின நிகழ்ச்சிகளை புறக்கணித்தார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் யோகா தினம் அனுசரிக்கப்படவில்லை. ம.பி., முதல்வர் கமல்நாத், ராஜஸதான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் யோகா தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
27-ஜூன்-201918:24:00 IST Report Abuse
Kumar இன்னும் படுத்துக்கிட்டு உருளுங்க, மூளை இல்லாதவர்கள், உலகம் தொழில்நுட்பத்தில் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்குது, இவங்க இன்னும் இதேயே சொல்லிக்கிட்டு திரியுறாங்க..கடவுளின் பயம் இல்லேயே
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
24-ஜூன்-201910:46:15 IST Report Abuse
Jayvee யோகா செய்தால். உடலுக்கும் நல்லது மனதிற்கும் நல்லது. மனது ஒரு நிலைப்பாடும், நல்ல எண்ணங்கள் தோன்றும். ஆதலால் நாங்கள் அதை செய்யமாட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஜூன்-201922:10:07 IST Report Abuse
Natarajan Ramanathan ஊழல் செய்யவே நேரம் போதவில்லை..... இதில் யோகா செய்ய நேரம் கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X