சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' பெண்களிடம் ரூ.7 கோடி பறித்தது எப்படி

Updated : ஜூன் 22, 2019 | Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (27)
Advertisement
கட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' பெண்களிடம் ரூ.7 கோடி பறித்தது எப்படி

சென்னை: திருமண ஆசை காட்டி, டாக்டர்கள், மென் பொறியாளர்கள் என, ஒன்பது பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததுடன், அவர்களிடம் இருந்து, 7 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்த காமுகனை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, செல்வவிநாயகர் நகரை சேர்ந்தவன், சக்கரவர்த்தி, 34. சென்னையை சேர்ந்த, டாக்டர் உட்பட, ஒன்பது பெண்களின் கற்பை சூறையாடி, 7 கோடி ரூபாய் வரை சுருட்டி உள்ளான். இவனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜூன், 17ல், கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.


திருமணம்

அப்போது, போலீசாரிடம் சக்கரவர்த்தி அளித்து உள்ள வாக்குமூலம்:எம்.இ., படித்துள்ளேன். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த, ஆனந்தியை, 2017ல், திருமணம் செய்தேன். எங்களுக்கு, 2 வயதில், பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன், 'சக்கரவர்த்தி பில்டர்ஸ்' என்ற, கட்டுமான நிறுவனம் துவங்கி, வீடுகள் வாங்கி, விற்று வந்தேன். சொந்த ஊரில், ஆடம்பரமாக பங்களா கட்டி வசித்து வந்தேன். விலை உயர்ந்த, மூன்று சொகுசு கார்களையும் வாங்கினேன்.ஆறு ஆண்டுகளுக்கு முன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனாளியாகும் நிலை ஏற்பட்டது. ஆடம்பர வாழ்க்கையையும் விட முடியவில்லை. இதனால், வரன் தேடுவது போல, 'மேட்ரிமோனி யல் வெப்சைட்' வாயிலாக, எம்.பி.பி.எஸ்., மற் றும் பி.இ., படித்த பெண்களுக்கு குறிவைத்தேன்.

அவர்களில், கை நிறைய சம்பாதிக்கும் விதவையர், விவாகரத்து பெற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர் கன்னிகளை தேர்வு செய்து, திருமண ஆசை காட்டினேன். அவர்களை சந்திக்கும் போது, ஆடம்பரமான உடை அணிந்து, சொகுசு காரில் செல்வேன்; ஆங்கிலத்தில் பேசி அசத்துவேன்.நான் விரித்த வலையில், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த, எம்.பி.பி.எஸ்., படித்த, 34 வயது, அரசு டாக்டர் சிக்கினார். விதவையான அவருடன் உல்லாசம் அனுபவித்து, 18 லட்சத்து, 70 ஆயிரம் சுருட்டினேன்.
அதேபோல, சென்னை, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த, எம்.பி.பி.எஸ்., படித்த, 38 வயது டாக்டரும் சிக்கினார். உடல் பருமனாக இருந்ததால், தன்னை எவரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை, அவரை வாட்டியது.அவரை, நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக, சத்தியம் செய்தேன். தன்னையே ஒப்படைத்த அவரிடம், 6.90 லட்சம் ரூபாயை அபகரித்தேன்.
மதுரை பெண்அதேபோல, மதுரையை சேர்ந்த, 30 வயதுடைய, பி.இ., படித்த, இரு பெண்களுடனும் உல்லாசம் அனுபவித்து, 1.15 லட்சம் ரூபாய் சுருட்டினேன். சென்னையைச் சேர்ந்த, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த, 36 மற்றும் 33 வயதுடைய பெண்களை ஏமாற்றி உறவு கொண்டேன்; அவர்களிடம், 1.75 லட்சம் ரூபாய் கறந்தேன்.
திருவண்ணாமலையை சேர்ந்த, திருமணம் ஆகாத, 34 வயது பெண், 'பிசியோதெரபிஸ்ட்'டாக உள்ளார். அவரிடம் பழகி, 3 லட்சம் ரூபாய் அபகரித்தேன். அதேபோல, திருச்சியைச் சேர்ந்த, 33 வயது பெண்ணிடம், 70 ஆயிரம் ரூபாய் பறித்தேன். கூட்டு றவு வங்கியில் வேலை பார்க்கும் அவரை, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அனுபவித்தேன்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த, 32 வயது பெண்ணிடம், 1.30 லட்சம் ரூபாய் சுருட்டினேன். இவர், சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். தற்போது, இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த ஒன்பது பெண்களை ஏமாற்றி, 7 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி உள்ளேன். என் நடவடிக்கைகளை அறிந்து, மனைவி, அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். என்னால் பாதிக்கப்பட்ட, லால்குடியைச் சேர்ந்த, பெண் டாக்டர், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், என்னை கைது செய்து, 50 நாட்கள், திருச்சி மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.இவ்வாறு, அவன் கூறியுள்ளான்.


எப்படி வந்தது இந்த பழக்கம்?

ஆறு ஆண்டுகளுக்கு முன், சக்கரவர்த்தியின் நண்பன் ஒருவன், 'மேட்ரிமோனியல்' இணையதளம் வாயிலாக, பெண்களை குறிவைத்து, பணம் பறிக்கலாம்; திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவிக்கலாம் என, யோசனை கொடுத்துள்ளான்.அப்போதிருந்து, இந்த வேலையை, சக்கரவர்த்தி செய்து வந்துள்ளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள், தைரியமாக புகார் அளிக்கலாம்; ரகசியம் காக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
26-ஜூன்-201920:23:14 IST Report Abuse
Sivak "s://www.dinamalar.com/special_detail.asp?id=1794067&Print=1" கல்யாண ராணி செய்தியை படியுங்க ... இவனை போட்டு தள்ளணும்னு சொன்னவங்க இதுக்கு என்ன சொல்றீங்க ... என்னை கேட்டா அந்த ஒன்பது பேரையும் போட்டு தள்ளனும் ..
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
30-ஜூன்-201917:18:02 IST Report Abuse
TechTஉண்மையான கருத்து. பெண்ணியம் இப்போது திசை மாறி சென்று கொண்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
26-ஜூன்-201914:11:09 IST Report Abuse
prakashc வசப்பட்டவள் வசப்படுத்தியவன் இதற்கு யார் பொறுப்பு , 30 வயதிருக்குமேல் இல்லறசுகம் இல்லா பெண்களின் அவலம்.
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
25-ஜூன்-201917:26:17 IST Report Abuse
S.P. Barucha இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள், தைரியமாக புகார் அளிக்கலாம் ரகசியம் காக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களை நம்பலாமா அந்த லட்சணத்தில் உள்ளது காவல் துறையின் கீழ் மட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X