சச்சின், லாரா சாதனையை தகர்ப்பாரா கோஹ்லி

Updated : ஜூன் 22, 2019 | Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement

சவுதாம்ப்டன்: ஆப்கனுடனான இன்றைய போட்டியில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 104 ரன்கள் அடித்தால் சச்சின், லாரா சாதனையை முறியடிப்பார்.கிங் கோஹ்லி:


உலக கோப்பை தொடரில் இன்று (ஜூன் 22) இந்திய அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. தென் ஆப்ரிக்கா, ஆஸி., பாகிஸ்தானை வென்றுள்ள இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. இதுவரை களமிறங்கிய 4 போட்டியில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. சச்சின் உள்ளிட்டோரின் பலரது ரெக்கார்டுகளையும் தகர்த்து வரும் கேப்டன் கோஹ்லி, இன்றைய போட்டியில் 104 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.


புது மகுடம்:


டெஸ்ட், ஒருநாள், டி-20 சர்வதேச போட்டிகளை சேர்த்து விரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை சச்சின் மற்றும் லாரா இருவரும் வைத்துள்ளனர். இருவரும் தங்களது 453வது சர்வதேச போட்டியில் இச்சாதனையை படைத்தனர். 131 டெஸ்ட், 222 ஒருநாள், 62 டி-20 என மொத்தம் 415 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோஹ்லி, இதுவரை 19,896 ரன்கள் அடித்துள்ளார். ஆப்கனுடனான இன்றைய போட்டியில், 104 ரன்கள் எடுத்தால், அதிவிரைவில் 20 ஆயிரம் சாதனைகளை படைத்த வீரர் என்ற புதிய மைல்கல்லை கோஹ்லி அடைவார்.


சாதனை மன்னன்:


மேலும், சர்வதேச போட்டிகளில் சச்சின்(34,357 ரன்கள்), ராகுல் டிராவிட் (24,208 ரன்கள்) இருவருக்கும் அடுத்து, 20 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் கோஹ்லிக்கு கிடைக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Bangalore,இந்தியா
22-ஜூன்-201912:43:09 IST Report Abuse
sam Virat and Dhoni are team player .. India needs team a player not individual record like Sachin.
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
22-ஜூன்-201911:35:25 IST Report Abuse
ANANDAKANNAN K விராட் சாதனை செய்வார், எந்த ஒரு விளையாட்டும் பொருளாதாரம் சம்பந்தம் இல்லாமல் இல்லை, இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கும் குடும்பம் பந்த பாசங்கள் உள்ளது, சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் வீரர்கள் திரு.அசாருதீன் மற்றும் அஜய் ஜடேஜா போன்றவர்களை நாம் இன்னமும் இந்த சமுதாயம் மரியாதையை கூடுகிறது என்பது கொஞ்சம் மனம் சங்கட படுகின்ற விஷயமாக உள்ளது, காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது அசாருதீன் அவர்களை MP ஆக்குகிறது , BCC என்ன செய்கிறது அஜய் ஜடேஜாவை வர்ணனை செய்யும் ஒரு நபராக அங்கீகாரம் செய்கிறது இது எல்லாம் தப்பு செய்தவரும் தப்பிக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தான் இங்கு உள்ளது, இன்றய இளைனர்கள் சினிமா,மது, மற்றும் கிரிக்கெட் என்ற மாயா உலகத்தில் சிக்கி தவிக்கிறார்கள், இவர்களுக்கு புரியவில்லை இது வாழ்கை இல்லை என்று, எதுவாக இருந்தாலும் விளையாட்டு விளையாட்டு தான்.
Rate this:
Share this comment
K. Jayadev Das - Bilai,இந்தியா
22-ஜூன்-201915:25:57 IST Report Abuse
K. Jayadev Dasமிகவும் அருமை நண்பரே. சரியான புரிதல்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-ஜூன்-201911:28:28 IST Report Abuse
தமிழ் மைந்தன் சச்சின் போல தேர்வாளர்களுக்கு விளம்பரங்கள் மூலம் வரும் தொகையை கொடுத்துக் கொண்டு தனது சொந்த சாதனைக்காக ஆடாமல் இருப்பது நல்லது.... அதுவே மிகப்பெரும் சாதனை
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
22-ஜூன்-201913:11:34 IST Report Abuse
VELAN Sகரெக்ட்டாக சொன்னீங்க , சொந்த சாதனை முக்கியமல்ல , சிறிய டீம் என்று சொல்லும் ஆப்கானை 200 ரன் அல்லது எட்டு விக்கட்டு வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்று சொல்ல வேண்டும் . நேத்து இந்த மாதிரிதான் ஆச்சு , பலம் வாய்ந்த இங்கிலாந்து டீம் , பலம் வாய்ந்த இங்கிலாந்து டீம் வெல்வது உறுதி என்றார்கள் , என்ன ஆச்சு , இலங்கை ஜெயித்தது , இங்கிலாந்து ஊத்திக்கிச்சு , அதுமாதிரி , கவனமாக ஆப்கானை வெல்வதுதான் இன்றய இந்தியாவின் லட்சியமா இருக்கவேண்டும் . சொந்த சாதனைகள் நமக்கு தேவையில்லை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X