எம்.பி.,க்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: சபாநாயகர் அறிவுரை

Updated : ஜூன் 22, 2019 | Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: எம்.பி.,க்கள் அனைவரும் லோக்சபாவின் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.








மக்கள் நம்பிக்கை


டில்லியில் நிருபர்களை சந்தித்த லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது: உலக நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த பார்லிமென்ட் நடைமுறைகளை, நானும் பின்பற்றி செயல்படுவேன். அந்த வகையில், லோக்சபாவை இன்னும் சிறப்பாக நடத்த முயற்சி செய்வேன். அதேநேரத்தில், லோக்சபாவில், எம்.பி.,க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிடுவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். அவை விதிகளை எம்.பி.,க்கள், பின்பற்ற வேண்டும். லோக்சபா கண்ணியத்தை காக்க முன்னுரிமை அளிப்பேன். இந்தியாவில், தேர்தல் வெளிப்படையாக நடக்கிறது. தேர்தலில், அதிகளவு மக்கள் பங்கேற்றது, நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.


முன்னுரிமை


லோக்சபாவின் முதல்நாளில் நான் கண்டிப்புடன் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், 'ஜிந்தாபாத், முர்தாபாத்' கோஷங்கள், பதாகைகளை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அவைக்குள் ஏன்கொண்டு வர வேண்டும். லோக்சபாவிற்கு வெளியே, கோஷம் போடுவதற்கும், பதாகைகள் ஏந்துவதற்கும் சுதந்திரம் உள்ளது. அப்படி இருக்கும்போது, லோக்சபாவிற்கும் எம்.பி.,க்கள் ஏன் விதிகளை மீற வேண்டும்.






எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பிரச்னையில்லை. அவர்களின் கருத்துகளையும் கேட்பேன். ஒவ்வொரு எம்.பி.,யும் அவரது தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறார். அவருடைய கருத்தும் கேட்கப்பட வேண்டும். 17 வது லோக்சபாவிற்கு அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக மின்னணு நூலகம் உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், நேற்று(ஜூன்21) லோக்சபாவின் முதல் நாள் நடவடிக்கைகளை ஓம்பிர்லா நடத்தினார். அப்போது ஒரு எம்.பி., பேசும்போது, மற்றவர்கள் குறுக்கிட்டனர். இதனை அனுமதிக்காத சபாநாயகர், அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டார்.


எதிர்ப்பு


நேற்று(ஜூன் 21) முத்தலாக் தடை செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசி கொண்டிருந்தார். அப்போது, லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி, சசிதரூர் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று அவருடன் பேசி கொண்டிருந்தார்.






இதனை கண்டித்து சபாநாயகர் கூறுகையில், அமைச்சர் பேசும்போது, சசி தரூர், அதிர் சவுத்ரி தங்களுகள் பேச வேண்டாம். இவ்வாறு அவையை நடத்தக்கூடாது. நீங்கள் பேச வேண்டும் என்றால், அவைக்கு வெளியே பேசலாம் எனக்கூறினார். இதனையடுத்து தனது இருக்கைக்கு திரும்பிய அதிர்சவுத்ரி, மசோதா குறித்து தான் பேசியதாக தெரிவித்தார். சபாநாயகர் கருத்திற்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவை ஆரம்பபள்ளி போல் நடத்த வேண்டாம் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
22-ஜூன்-201915:09:15 IST Report Abuse
sundarsvpr உடல் தேற கசப்பு மருந்தும் இருக்கும் . மறுப்பு தெரிவித்தால் வலுக்கட்டாயமாய் கொடுப்பார்கள். இது மன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். சபையில் கசப்பு மருந்து கட்டாய வெளியேற்றம். சபை நடுவில் வெளிநடப்பு செய்பவர்களுக்கு சம்பளம் படியை ஏன் கொடுக்கவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-ஜூன்-201914:15:05 IST Report Abuse
தாண்டவக்கோன் சபாநாயகர் அறிவுரை
Rate this:
Share this comment
Cancel
Venkat - Bengaluru,இந்தியா
22-ஜூன்-201912:39:37 IST Report Abuse
Venkat மக்கள் பிரதி நிதிகளாக தேர்ந்தெடுக்க பட இருப்பவர்களுக்கு தகுதி என்று உருவாக்கப் படவேண்டும்... கல்வி, அனுபவம், பொது நலப்பணியில் ஈடுபாடு உள்ளவர்கள் என்ற தகுதி அடிப்படையில் மட்டுமே வாய்ப்புகள் தர வேண்டும்... அப்படி இருந்தால் இது போன்ற பிரச்னை இருக்காது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X