லாலு மகன் பற்றி தகவல் தந்தால் ரூ.5100 பரிசு

Updated : ஜூன் 22, 2019 | Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் பற்றி தகவல் தந்தால் ரூ.5100 பரிசு வழங்கப்படும் என பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





சமூக ஆர்வலரான தமன்னா ஹாஸ்மி சார்பில் முஷாபர்நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வியை காணவில்லை. அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.5100 பரிசு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




இது குறித்து தமன்னா கூறுகையில், தேஜஸ்வி தன்னை ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர்களின் தலைவர் என கூறிக் கொள்கிறார். முஷாபர்நகரிலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான ஏழைக் குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கும் போது அவர் எங்கே சென்றார்?
பதவிக்கு வந்த பிறகும் அவர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டாமா? தலைவர்கள் தங்களை தலித்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் காவலர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக எதுவும் செய்தது இல்லை என்றார்.




மூளைக்காய்ச்சலால் 120 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே மீதும் முஷாபர்நகர் கோர்ட்டில் தமன்னா வழக்கு தொடர்ந்துள்ளார். பல முக்கிய வழக்குகள் அனைத்து கோர்ட்களில் தேங்கி உள்ளதாகவும், இதற்கு மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தமன்னா குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
22-ஜூன்-201915:22:17 IST Report Abuse
chails ahamad பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் , எதிர்கட்சியாக இருந்திடும் நிலைகளிலும் , மக்கள் நல பணிகளில் அக்கறையுடன் பணியாற்றுவது அவசியம் என்ற நிலைகளில் , பீகாரில் நூற்று கணக்கான ஏழை பிள்ளைகள் மூளை காய்ச்சல் நோயினால் மரணித்து கொண்டுள்ளதை ஆட்சியில் இருப்பவர்களும் , ஆட்சியில் இல்லாதவர்களும் , தக்க கவனங்களை செலுத்தி பிள்ளைகளின் உயிர் காத்திட தக்க நடவடிக்கைகளை மேற் கொண்டு இருக்க வேண்டியதை தவிர்த்த காரணத்தால் பலரின் விமரிசனங்களுக்கு ஆளாகிய தீர வேண்டும் , சமூக சேவகர் தமன்னா ஹஸ்மி அவர்களை பாராடுவோம் .
Rate this:
Share this comment
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
22-ஜூன்-201914:53:38 IST Report Abuse
sundarsvpr சமூக புத்துணர்ச்சி மேம்பாடு என்பது நலிந்த மக்கள் மேம்பாடு என்ற கோட்பாட்டில் முன்னேறிய வகுப்பினை பின்தள்ளுவது அல்ல. நலிந்த மக்களை மேல்நிலைக்கு கொண்டுவருவது தான். அரசியல் கட்சிகளை கவனியுங்கள். தலைவர்கள் தலைவராக இருக்கிறார்கள். தொண்டர்கள் தொண்டராக இருக்கிறார்கள். இங்கு எப்போது ஏற்ற தாழ்வு மறைகிறதோ அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் ஆரம்பம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-ஜூன்-201914:25:20 IST Report Abuse
Rafi தமன்னா ஹஸ்மிக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் சமூக விழிப்புணர்வு எச்சரிக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X