விரைவில் வேலூரில் தேர்தல்

Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 விரைவில் வேலூரில் தேர்தல்

விரைவில் வேலுாரில் தேர்தல்

தமிழகத்தில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த, 38 தொகுதிகளில், 37 தொகுதிகளை, தி.மு.க., கூட்டணி வென்றது. வேலுார் தொகுதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிட்டார். இங்கே, தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில், வருமான வரித்துறை, 'ரெய்டு' நடத்தியது. இதில், கணக்கில் வராத, 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், தேர்தல் ஆணையம் வேலூரில் தேர்தலை ரத்து செய்தது. சமீபத்தில், புதிய லோக்சபா பதவியேற்றுள்ள நிலையில், வேலூரில் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த முறை, பணம் பட்டுவாடா ஏதும் நடக்காமல் இருக்க, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதற்காக, அதிக அளவில் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கவிருக்கிறது. ஒரு மாதத்திற்குள், வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து, ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா வேண்டாம்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி, படு தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முன்னதாக பிரியங்கா தீவிர அரசியலில் குதித்தார். கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச் செயலராகவும், அவர் நியமிக்கப்பட்டார்.பிரியங்கா, மறைந்த முன்னாள் பிரதமர், இந்திராவின் முகமாக பார்க்கப்பட்டதால், உ.பி.,யில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என, தொண்டர்கள் முதல், தலைவர்கள் வரை, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்திரா குடும்பத்தின் சொந்த தொகுதியான அமேதியிலேயே, ராகுல் பரிதாபமாக தோற்றார்.இந்நிலையில், காங்., கட்சி தலைவராக நீடிக்க, ராகுல் விரும்பவில்லை. எனவே, பிரியங்காவை கட்சி தலைவராக்கலாம் என, சில தலைவர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், இதற்கு பல சீனியர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'பிரியங்கா, எந்த ஒரு விஷயத்தையும், உணர்ச்சி பூர்வமாக கையாள்பவர்; அதன்படியே முடிவும் எடுப்பார். 'ஆனால், ராகுல், தொண்டர்கள் சொல்வதை அமைதியாக கேட்பார். பிரியங்கா முக்கிய பொறுப்பில் வருவதை, கட்சி தலைவர்கள் யாரும் விரும்பவில்லை' என்கிறார், காங்.,கின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.'பிரியங்கா, 1997ல் எடுத்த ஒரு முடிவால் தான், அவருடைய குடும்பம் மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியும், திண்டாடிக் கொண்டிருக்கிறது' என, கிண்டலாக சொல்கிறார், அந்த முன்னாள் அமைச்சர். 1997ல் தான், ராபர்ட் வாத்ராவை, பிரியங்கா திருமணம் செய்தார்.
கடுப்பில் காங்கிரஸ்

டில்லியில், அக்பர் சாலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு எதிரே, இந்திய விமானப்படை தளபதி, பி.எஸ். தனோவாவின் அரசு பங்களா உள்ளது. இந்த பங்களாவின் வாசலில், சுகோய் என்ற போர் விமானத்தின் மாடலை வைத்திருந்தார் தனோவா.இந்நிலையில், காங்., தலைவர், ராகுல், சமீபத்திய தேர்தலில், 'ரபேல்' போர் விமானம் வாங்குவதில், மோடி அரசு ஊழல் செய்துள்ளது என, இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தார். ஆனால், ரபேல் விமானம் இந்திய விமானப்படைக்கு தகுதியானது தான் என, தனோவா சொல்லியிருந்தார். இவர் எதற்கு, ரபேலுக்கு ஆதரவாக பேசுகிறார் என, ராகுல் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், அவரை விமர்சித்திருந்தனர். கடைசியில், ராகுலின் ரபேல் பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை.லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாள், காங்கிரஸ் அலுவலகம் வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. எதிரே தனோவா பங்களாவின் வாசலில், சுகோய் விமானத்தின் மாதிரியை மாற்றிவிட்டு, ரபேல் போர் விமானத்தின் மாதிரி வைக்கப் பட்டிருந்தது. எந்த விமானத்தை எதிர்த்து ராகுல் பிரசாரம் செய்தாரோ, அதே விமானத்தை, கட்சி அலுவலகத்திற்கு எதிரே வைத்துவிட்டனரே என, காங்கிரசார் படு எரிச்சலில் இருக்கின்றனர். ரபேல் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனம், இரண்டு ரபேல் விமான மாடல்களை இந்தியாவிற்கு அனுப்பியது. ஒன்று பெங்களூரில் நடைபெற்ற விமான விழாவில் வைக்கப்பட்டது. இரண்டாவதை, தனோவா, தன் பங்களா முன் வைத்துவிட்டார்.
கோப்புகளில் ஹி।ந்தி

மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவர், ரமேஷ் போக்கிரியால். இவர், முன்பு, உத்தரகண்ட் மாநில முதல்வராக இருந்தார். ரமேஷ், ஹிந்தி கவிஞர் மற்றும் பத்திரிகையாளர். தன்னுடைய, 44 ஹிந்தி கவிதை தொகுப்புகளை, புத்தகங்களாக வெளியிட்டு உள்ளார்.முதன் முறையாக, மத்திய அமைச்சராகியுள்ள ரமேஷ், தனக்கு வரும் கோப்புகளில் எழுதப்படும் குறிப்புகள், இனி ஹிந்தியில் தான் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக, அமைச்சக கோப்புகளில், ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படும்.இப்போது, குறிப்புகளை ஹிந்தியில் எழுத வேண்டும் என்ற உத்தரவால், அமைச்சக ஊழியர்கள் நொந்து போயுள்ளனர். இவர்களுக்கு ஹிந்தி எழுத படிக்கத் தெரியும் என்றாலும், அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் குறிப்பு எழுதி பழக்கமாகிவிட்டது. அதனால், ஹிந்தியில் எழுதுவது கடினமாக உள்ளது.அலுவலக குறிப்புகளை ஹிந்தியில் எழுத, அமைச்சர் உத்தரவிட்டதற்கு, ஒரு காரணமும் இருக்கிறது. அவருக்கு, ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
29-ஜூன்-201916:45:58 IST Report Abuse
Poongavoor Raghupathy DMK Party is daily calling Edappadi Ministry as a corrupt Ministry is exposed fully in Vellore for their readiness to give corruption to voters for getting votes. Vellore people must know the bad intention of DMK and vote for a Party other than DMK. DMK is notorious in their scientific corruption dealings since Kalaignar's days. Beware of DMK and Leaders other than from DMK.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X