பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இறங்கணும்!
நம் நன்மைக்காக நாமே களத்தில்...
பொதுப்பணித்துறையில் ஆளே இல்லை
பணிச் சுமையில் தவிக்கும் ஊழியர்கள்

ஏரி, குளங்களை புனரமைக்கும் விஷயத்தில், நமக்கு நாமேகளமிறங்கினால் தான் உண்டு. ஏனெனில், பொதுப்பணித் துறையில், போதுமான ஆட்கள் இல்லை. இருக்கும் சொற்ப அதிகாரிகளும், ஊழியர்களும், கூடுதல் பணிச் சுமையால் தவிக்கும் நிலைகாணப்படுகிறது.

நம் நன்மை, நாமே களத்தில்,இறங்கணும்!


பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர் வளத்துறை உட்பட, பல்வேறு பிரிவுகள் உள்ளன. கட்டடங்கள் பிரிவு வாயிலாக, அரசு துறைகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டப் பட்டு வருகின்றன.நீர் வளத்துறை வாயிலாக, மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பராமரிக்கபடுகின்றன. தற்போது, மழை பற்றாக்குறையால், பல நீர் நிலைகள் வறண்டு விட்டன.முறையான பராமரிப்பின்மை காரணமாக, அவற்றின் கொள்ளளவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வரும், அக்டோபரில், வட கிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. அதற்குள் நீர்நிலைகளை புனரமைத்தால், அவற்றில் கூடுதல் நீரை சேமிக்க முடியும்; வரும் காலங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும்.

கூடுதல் பொறுப்புகுறுகிய கால அவகாசமே இருப்பதால்,

பணிகளை விரைவுபடுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஏரிகளை புனரமைக்க, 500 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.உலக வங்கி நிதியில், நீர்வள, நிலவள திட்டத்தின் வாயிலாகவும் பணிகளை மேற்கொள்ள, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், துறையில், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள், அதிகளவில்காலியாக உள்ளன.இதனால், ஒவ்வொரு அதிகாரிக்கும், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மண்டல கட்டடங்கள் பிரிவு கண்காணிப்பு பொறியாளராக உள்ள கணேசனுக்கு, நீர் வளத்துறையில், பாலாறு கோட்ட கண்காணிப்பாளர் பொறுப்பு, கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.இவர் தான், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பான பணிகளையும் கவனிக்க வேண்டும்.கட்டடங்கள் மற்றும் நீர் வளத்துறை என, இரண்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில், கணேசன் உள்ளார்.


இதேபோல, சென்னை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளராக உள்ள ஜெயராமன், சமீபத்தில், முதன்மை தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுப்பணித் துறையின், அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பணிகளையும், இவர் தான் கவனித்தாக வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ளநீர்நிலைகள் பிரச்னை, திட்டங்கள் தொடர்பாக, நாள்தோறும், துறை செயலர் மற்றும் துறை அமைச்சரான, முதல்வரின் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.இதனால், இவரும் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளார்.ஒட்டுமொத்தமாக, பொதுப்பணித் துறை யையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அரசு செயலரான பிரபாகருக்கு, நெடுஞ்சாலை துறையின்

Advertisement

செயலராகவும், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களாக, இவ்விரு துறைகளின் பணிகளையும், அவர் தான்கவனித்து வருகிறார்.


சவால்இது மட்டுமின்றி, காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளதால், அடிக்கடி டில்லி செல்ல வேண்டியுள்ளது. இவரும் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி, தவித்து வருகிறார். இதேபோல, துறையில் உள்ள பலருக்கும், கூடுதல் பணிச்சுமை உள்ளதால், போர்க்கால அடிப்படையில், நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வது, மிகப்பெரிய சவாலான பணியாகவே, இவர்களுக்கு உள்ளது.


எனவே, ஆங்காங்கே உள்ள ஊர் மக்களும், குடியிருப்போர் நலச்சங்கங்களும், தன்னார்வ இளைஞர்களும், இப்பணியில் களமிறங்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.பருவ மழை வருவதற்குள், பொது மக்கள், தங்கள் நன்மைக்காக, அவர்களே களமிறங்கி, ஏரி, குளங்களை துார்வாரி சுத்தம் செய்தால் தான் பலன் பெற முடியும்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
23-ஜூன்-201917:12:25 IST Report Abuse

Rajaiah Samuel Muthiahrajகுளங்களை தூர் வாரிவிடுவதால் மட்டும் சரியாகிவிடுமா குளங்களின் நீளம் அகலம் மீட்கப்பட்டு ஆழம் அதிகமாக்கிடவேண்டும் அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் உண்மையாய் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகடக்கு அரசு மாற்று இடம் தரவேண்டும் ஊடகங்கள் படங்களுடன் மீட்பு பணிகளை பிரசுரிக்கவேண்டும்

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
23-ஜூன்-201912:58:42 IST Report Abuse

THENNAVANசென்றவாரம் மறைமலை நகர் பொதுப்பணித்துறை வடடார பொறியாளர் ராதாகிருஷ்ணன் நடந்துகொண்ட வீடியோ தமிழகத்தின் அரசு ஊழியர்களின் கேவலமான மக்கள் சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது 39 லட்சம் தயார் செய்து ஒரு தொண்டு நிரூபணம் தன்னார்வ தொண்டர்களோடு இந்த நல்லவரை பார்த்துகேடடாள் பணத்தை என்னிடம் கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்க வேலையை பாருங்கன்னு எப்படி அழகாக சொல்லியுள்ளார் நண்பர்களே இன்னும் அவர் வேளையில்தான் உள்ளார்.மக்கள் வரிப்பணத்தில்தான் சோறு சாப்பிடுகிறார்.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
24-ஜூன்-201912:08:49 IST Report Abuse

Darmavanஏன் இன்னும் கலெக்டர் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை..இதை வளரவிடக்கூடாது.ஏரி குளங்கள் இவன் அப்பன் வீட்டு சொத்தல்ல,இவன் பணி நீக்கம் செய்யப்படவேண்டும். ...

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
23-ஜூன்-201911:28:16 IST Report Abuse

அம்பி ஐயர்நிர்வாகச் சீர்கேடு தான் காரணம்.... நிர்வாகத் திறமையின்மை.... பணம் வாங்கிக் கொண்டு... போஸ்டிங் போடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி பணம் வாங்கிக் கொண்டு போஸ்டிங் போடும் போது அதை எதிர்த்து யாராவது கேஸ் போட்டால் முடிந்தது....

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X