மக்களின் முயற்சியால் நிறைந்த ஊரணி, சக்கரை தீர்த்த குளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் முயற்சியால் நிறைந்த ஊரணி, சக்கரை தீர்த்த குளம்

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (4)
Share
மக்களின் முயற்சியால் நிறைந்த ஊரணி, சக்கரை தீர்த்த குளம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களின் முயற்சியால் இரு ஊரணிகள், ஆதிஜெகநாத பெருமாள் கோயில் குளம் நிரம்பி நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பருவ மழை பொய்த்தது. நீர் நிலைகளை ஆதாரமாக கொண்டு மாவட்டத்தின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.மழைக்காலத்தில் 3,500 க்கும் மேற்பட்ட ஊரணி, சிறு குளங்கள், கண்மாய்கள் நிறைந்து விடும். இன்று பல ஊரணிகள், கண்மாய், குளங்கள் துார்ந்து போயின. பல இடங்களில் ஆக்கிரமிப்பால் வரத்துக்கால்வாய்கள் அடைக்கப்பட்டு மழை நீர் வீணாகிறது.அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

மக்களின் முயற்சி

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ரோட்டோர ஓடைகள் வழியா கடலுக்கு வீணாக செல்லும் நீரை அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கரை போட்டு தடுத்தனர். அந்த இடத்தில் இருந்து ஊராட்சி உதவியுடன் மூன்று பம்புகள் மூலம் தண்ணீர் கண்மாய்கள், குளங்களுக்கு அனுப்பப்பட்டது.

2018 அக்., நவ.,டிச., மூன்று மாதங்களில் பம்பிங் செய்யப்பட்ட மழை நீர் மதகு கூட்டம் ஊரணி, கூத்தியார் கூட்டம் ஊரணி, ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சக்கரை தீர்த்த குளங்களை நிரப்பியது.கடும் வெப்பம்வறட்சியிலும் இவற்றில் தற்போதும் தண்ணீர் உள்ளது.

சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறியதாவது: வரத்துக்கால்வாய் துார்ந்து போனதால், மோட்டார்கள் மூலம் தண்ணீரை நிரப்பினோம். இன்று வரை தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. வீடு போர்வெல்களிலும் தண்ணீர் உள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X