பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள்: லட்சங்களில் கொழிக்கும் அதிகாரிகள்

Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

காட்டுமன்னார்கோவில்:கடலுார் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்தப்படும் வெளி ஆட்களால், மாவட்ட அதிகாரிகள், லட்சங்களில் கொழித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மொத்தம் 246 அரசு மதுக்கடைகளில் 946 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டன.கடலுார் மாவட்டத்தில் 246 ஆக இருந்த டாஸ்மாக் கடைகள் 120 என குறைக்கப்பட்டது.
மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழந்தனர். ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், மீதமுள்ள கடைகளில், அனைத்து ஊழியர்களையும் பணியமர்த்தி சுழற்சி முறையில் பணி வழங்கியது. பல கடைகள் மூடப்பட்டதால், மீதமுள்ள கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. அதே சமயம் வேலையிழந்த ஊழியர்களுக்கும் வேலை வழங்கப்பட்டது. இதனால் 3 பேர் இருக்க வேண்டிய கடையில், 8 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். சமீப காலமாக இந்த நிலை மாறி உள்ளது. ஊழியர்களுக்கு வேலை கொடுக்காமல், அந்தந்த விற்பனையாளர்கள் அவர்களுக்கு ஒத்து வரும் வெளி ஆட்களை பணிக்கு வைத்து கொள்கின்றனர்.இதனை கண்டுகொள்ளாமல் இருக்க சூப்பர்வைசர்கள் கவனிக்கப்படுகின்றனர்.
மாவட்ட அதிகாரிகளுக்கு, சூப்பர்வைசர்கள் லட்சங்களில் கப்பம் கட்டுகின்றனர். 10 முதல் 15 கடைகளுக்கு ஒருவர் கமிஷன் பெற்று தருவதற்கு என நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்ட டாஸ்மாக் துறையில் நடக்கும் முறைகேடுகளை அதிரடியாக தடுத்து, அனைத்து அதிகாரிகளையும் வேறு துறைக்கு மாற்ற வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் வெளி ஆட்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
24-ஜூன்-201904:25:24 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இதுலேயும் ப்ராடுதானா படுபாவிகளா நீங்கல்லாம் செத்தால்கூட மாறமாட்டீங்கய்யா மக்களை போதையே தள்ளி இவனுக்கள் கொடியே சுகம் அனுபவிக்கறானுகளா நாசமாப்போக குடிப்பது அசிங்கம் என்றுதனக்கேதெரியனும் ஆனால் அடிமையாகிட்டானுக பலன் மக்களுக்கு தொல்லை ஆளுவோருக்கு கொண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X