பொது செய்தி

தமிழ்நாடு

மழை வேண்டி சிறப்பு யாகம்

Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 மழை வேண்டி சிறப்பு யாகம்

சிதம்பரம்:சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில், கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,பாண்டியன் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
இதில், எம்.எல்.ஏ., பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், சேகர், கோபி, குமார், சண்முகம், சிதம்பரம் நகர செயலர் செந்தில்குமார் கலந்து கொண்டனர். மழைவேண்டி, விநாயகர் ஹோமத்தில், துவங்கி வருண ஹோமம் வரை நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை தலைவர் குமார் தலைமையில் இசைத்துறை பேராசிரியர்கள் பாலச்சந்திரன், முத்துக்குமாரசாமி, சுந்தர் குழுவாக திருவாசம், பெரியபுராணம் உள்ளிட்ட பாடல்களை பாடினர்.இதில், அ.தி.மு.க. நிர்வாகிகள், சந்தர் ராமஜெயம், சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விருத்தாசலம்விருத்தாசலம் நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கொளஞ்சியப்பர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வருணயாகம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகர செயலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். காலை 10:30 மணிக்கு மேல், பகல் 12:00 மணிக்குள் கோவில் வளாகத்தில் புனிதநீர் கலசங்கள் வைத்து, வருண ஜெபம், பதிகம் பாடுதல் மற்றும் அமிர்தவர்ஷினி இசையுடன் சிறப்பு ேஹாமம் நடந்தது.
சித்தி விநாயகர் கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.முன்னாள் நகராட்சி தலைவர் அருளழகன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் விஜயகுமார், டாக்டர் சேதுபதி, நகர அவைத் தலைவர் தங்கராசு, ஒன்றிய செயலர்கள் பழனிவேல், பச்சமுத்து, பாலதண்டாயுதம், பாசறை மாவட்டச் செயலர் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் தம்பிதுரை பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
24-ஜூன்-201905:13:05 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வருண தேவா ப்ளீஸ் வந்துட்டேன் என்று சொல்லினேனே வாடாப்பா பூமியை நினைக்காமல் கேணிகளிலேயும் நெறைய தண்ணீர்வரனும் என்று வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
24-ஜூன்-201904:27:00 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒருபக்கம் வருண ஜபம் மறுபக்கம் மணல்கொள்ளை மஜாதான் என்ஜாய் பண்ணுங்கய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X