அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு எங்க மாவட்ட தண்ணீரா போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை

Added : ஜூன் 22, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னைக்கு எங்க மாவட்ட தண்ணீரா போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை

வேலுார், ''ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க நேரிடும்'' என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.தண்ணீர் பிரச்னையில் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து வேலுாரில் நேற்று தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற துரைமுருகன் அளித்த பேட்டி:வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு குடிநீரை கொண்டுச் செல்லப் போவதாக முதல்வர் கூறுகிறார். இங்கிருந்து குடிநீரை கொண்டுச் சென்றால் மாவட்டம் தழுவிய மிகப்பெரிய அளவில் போராட்டத்தை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர்கள் பதிலடிசட்டத்துறை அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் நேற்று அளித்த பேட்டி:வேலுாரில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கொண்டே தி.மு.க.வினர் தண்ணீர் தர எதிர்க்கும்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து எப்படி தண்ணீர் கொடுப்பர்.இதன் மூலம் சமுதாய நலனில் தி.மு.க.வினருக்கு உள்ள அக்கறையை மக்கள் அறிந்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வணிக வரித் துறை அமைச்சர் வீரமணி கூறுகையில் ''ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் நீரில் உபரி நீர் தான் சென்னை எடுத்து செல்லப்பட உள்ளது. இதனால் வேலுார் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த பிரச்னையை தி.மு.க.வினர் அரசியலாக்க பார்க்கின்றனர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
23-ஜூன்-201914:52:16 IST Report Abuse
s.rajagopalan துரை சொல்வது நியாயம்தான்....'எங்கோ' இருக்கிற சென்னைக்கு ஜோலார்பேட்டை தண்ணீரா? விட மாட்டோம்..... கெளம்பீட்டாரய்யா...? இனி தனி ஜோலார்பேட்டை, தனி தஞ்சாவூர்...என்று துவங்க வேண்டியதுதான்.... ஆண்டவா...இந்த குறுகிய மனப்பான்மையை என்னவென்று சொல்ல ?
Rate this:
Cancel
Kannan - Chennai,இந்தியா
23-ஜூன்-201912:02:12 IST Report Abuse
Kannan தி மு க வின் உண்மையான சொரூபம் தெரியட்டும் அனைவருக்கும். அது சரி ஒரு மாவட்டம் மற்றொரு மாவட்டத்திற்கு தண்ணீர் தர மறுக்கலாம் அது சரியென்றால், தி மு க வும் அதன் கூட்டணி கட்சிகளும் கர்நாடக தண்ணீர் தர மறுப்பதை குறைகூறுவது ஏன்? தமிழ் மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களை முட்டாளாக்கி வைத்திருப்பது தி மு க தான்?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-ஜூன்-201909:38:34 IST Report Abuse
 Muruga Vel திமுக பெருந்தலைகள் நடத்தும் சாராய ஆலைகளை மூட வேண்டியது தானே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X