திறக்கப்படாத அரசு கட்டடம் வாடகையில் வீணாகும் வரிப்பணம்

Added : ஜூன் 23, 2019
Share
Advertisement
புதுக்கோட்டை, புதுக்கோட்டையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள், இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம், வாடகையாக வீணடிக்கப்படுகிறது.புதுக்கோட்டை அருகே, திருக்கோகர்ணம் அரசு, ஐ.டி.ஐ., பகுதியில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களுக்கு, பொதுப்பணித் துறை சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டெண்டர்' விடப்பட்டு, இரண்டு

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள், இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம், வாடகையாக வீணடிக்கப்படுகிறது.புதுக்கோட்டை அருகே, திருக்கோகர்ணம் அரசு, ஐ.டி.ஐ., பகுதியில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களுக்கு, பொதுப்பணித் துறை சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'டெண்டர்' விடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கட்டுமான பணிகள் முடிந்தன.முதல்வரின் கீழ் உள்ள பொதுப்பணித் துறை நிர்வாகம், கட்டுமான பணிகள் முடிவடைந்த கட்டடங்களுக்கு திறப்பு விழா நடத்துவதில், ஆர்வம் காட்டவில்லை.இதனால், தற்போது வரை, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்கள், தனியார் கட்டடத்தில், வாடகைக்கு இயங்கி வருகின்றன. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.எனவே, 'திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் புதிய கட்டடங்களை திறந்து, அரசு அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் இயங்குவதை தவிர்க்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X