இது ராமரின் தேசம்: உ.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (77)
Advertisement

லக்னோ: சர்வதேச யோகா தினத்தில், உத்தர பிரதேச அமைச்சரின், 'ஷூ லேஸை' அரசு ஊழியர் சரி செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைவிட, 'இது ராமரின் தேசம்' என, அமைச்சர் அளித்த விளக்கம், சர்ச்சையை தீவிரமாக்கி உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி, இங்குள்ள ஷாஜகான்புரில், நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சர், லட்சுமி நாராயணன், அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய ஷூ லேஸ் கழன்றது. அங்கிருந்த ஒருவர் கீழே குனிந்து, அதை சரி செய்தார். அவர், அரசு ஊழியர். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் செய்கைக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து, அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: ஹிந்து கடவுளான ராமர், வனவாசம் சென்றபோது, அவருடைய பாதுகையை வைத்து, 14 ஆண்டுகள் ஆட்சி நடந்த நாடு இது. இதுவே, என்னுடைய சகோதரனோ அல்லது உறவினரோ, ஷூ லேஸை சரி செய்திருந்தால், ராமரின் பூமி என்பதற்கு உதாரணமாக கூறியிருப்பர். இதை, நீங்கள் விமர்சிக்கக் கூடாது; பாராட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இது, சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அமைச்சரின் பேச்சை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூன்-201917:31:05 IST Report Abuse
RM Ramayan is in records of vietnam,indonesia,cambodia,thailand,nepal,butan etc., They have different versions. Also each country claims that Rama birthplace,sita birthplace in their country. So Ramji is common to southeast asia. Same Ramji respected a dobis word.So he respects his servantIf India is Ramdesh ,follow him perfectly
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
23-ஜூன்-201915:57:58 IST Report Abuse
SENTHIL நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் தமது பெயரில் இது சொரியார் மண் என சொல்லும்போது பகவானின் பெயரில் சொல்வது என்ன தப்பு .
Rate this:
Share this comment
Cancel
கலைவாணன், காட்டூர் பாரதம் எப்போதும் ராமர் பூமி தான். சில பிரிவினை சக்திகள் மற்றும் இடை செருகல்கள் மட்டும் நாட்டை கொள்ளை அடிக்க வேண்டி மாற்று கருத்து சொல்லி வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X