பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர், நடிகைகள் ஓட்டு போட்டனர்

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (15+ 5)
Advertisement

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் , நடிகைகள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். மாலையில் தேர்தல் முடிந்தது.






தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019- 22 ம் ஆண்டிற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. மொத்தம் 3,644 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், 3,171 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.





தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும்மோதுகின்றன. தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியதை தொடர்ந்து இன்று(ஜூன் 23), சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை தேர்தல் நடக்க உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில், நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார்.
பின்னர் அவர் , அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம்.தவறான புரிதலால் சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன. தேர்தல் நேரத்தில் ஒருவரையொருவர் குறை சொன்னது வேடிக்கை என்றார்.
நடிகர் சிபிராஜ், சார்லி, ரமேஷ் கண்ணா நாசர், நடிகை ரோகிணி மற்றும் கோவை சரளா உள்ளிட்டோர் ஓட்டுப்போட்டனர். நடிகர் பொன்வண்ணன், தனது மனைவி சர்ண்யாவுடன் வந்து ஓட்டு போட்டார்




Advertisement


ஓட்டு போட்ட பின்னர் நடிகர் விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்னை எனறால், என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு தரப்பட்ட பொது செயலாளர் பதவி சாதாரண பதவி அல்ல. கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம் என்றார்.





நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், தபால் ஓட்டுகளை அளிக்க கூடுதல் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்றார்.





ஓட்டு போட்ட பின்னர், நடிகை குஷ்பு கூறுகையில், பல தடைகளுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. உண்மை வெல்லும். நடிகர் சங்க தேர்தலில் 80 சதவீத ஓட்டுகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.





நடிகர் ராம்கி, நடிகைகள், கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி, அம்பிகா, ராதா ஆகியோர் ஓட்டு போட்டனர்.





நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகன் ஓட்டுப்போட வந்த போது, அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வயதில் மூத்த நாடக நடிகர்கள் சிலர், தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
24-ஜூன்-201903:58:03 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நடிகர் சங்க தேர்தல்ல வடிகால் தான் வோட்டுப்போடுவாங்க பொதுஜனமா வருவாங்க அதுலேயும் பாவம் மோகன் க்கு ஓட்டுபோடமுடியாலேயே எவனோ அவரை ஓட்டைபோட்டுட்டானாம் கண்றாவியா இருக்கே
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜூன்-201920:21:53 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழ் ராகெர்சில் பார்த்து நடிகனை பிச்சைகாரனாக்குங்கள். GOOD IDEA.
Rate this:
Share this comment
Cancel
sankar - Chennai,இந்தியா
23-ஜூன்-201919:35:12 IST Report Abuse
sankar ரொம்ப தேவை, போயி புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X