சகிப்புத்தன்மையில் இந்தியா உறுதி : அமெரிக்க அறிக்கைக்கு பதிலடி

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி ; இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு ஊட்டப்படுகிறது என்ற அமெரிக்க அரசின் அறிக்கைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக, இந்தியா சகிப்புத்தன்மையில் உறுதி கொண்டிருப்பதாக பதிலடி தந்துள்ளது.அமெரிக்க அறிக்கை :கடந்த ஜூன் 21 அன்று, அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர துறையின் சார்பில் வெளியான அறிக்கையில், ''இந்தியாவில்

புதுடில்லி ; இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு ஊட்டப்படுகிறது என்ற அமெரிக்க அரசின் அறிக்கைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக, இந்தியா சகிப்புத்தன்மையில் உறுதி கொண்டிருப்பதாக பதிலடி தந்துள்ளது.



latest tamil news





அமெரிக்க அறிக்கை :

கடந்த ஜூன் 21 அன்று, அமெரிக்காவின் சர்வதேச மதசுதந்திர துறையின் சார்பில் வெளியான அறிக்கையில், ''இந்தியாவில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, வெறுப்பு விதைக்கப்படுகிறது,'' என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.


இழிவுபடுத்தும் செயல்

இதற்கு பா.ஜ., சார்பில், '' இது நரேந்திர மோடி அரசை இழிவுபடுத்தும் செயல்'' என்று நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறுகையில், '' இந்தியா வலுவான ஜனநாயகத்தையும், சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் அளித்துள்ளது. இவை அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை.


latest tamil news





தேவையற்ற தலையீடு :

எங்களது குடிமக்கள் குறித்து, வெளிநாட்டு அரசுகளின் தலையீடுகள் தேவையற்றவை,'' என்றார்.
மேலும், '' இந்தியா தனது மதச்சார்பற்ற மாண்புகள் குறித்த பெருமிதம் கொள்கிறது. ஒரு ஒருங்கிணைந்த பன்மைத் தன்மை வாய்ந்த சமூகத்தை கொண்ட உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா,'' என்றும் ரவீஸ்குமார் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்திய சிறுபான்மையினர் குறித்த அறிக்கை, வரும் ஜூன் 25 ல், அந்நாட்டின் செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா வரவுள்ள நிலையில் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalam - Salem,இந்தியா
23-ஜூன்-201919:40:23 IST Report Abuse
Kalam மிஷநரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாட்டி இப்படி CNN , பிபிசி போன்ற மீடியாக்கள் மூலம் பொய் செய்தி திரும்ப திரும்ப பரப்பி விடும் செயலாகவும் இருக்கலாம்
Rate this:
Cancel
23-ஜூன்-201919:00:33 IST Report Abuse
ஆப்பு சிறுபான்மையினர் என்ன மூர்க்கனா இருந்தாலும் சகிச்சுக்கிட்டு போகணும்... வேற வழி? இதையேதான் காங்கிரஸ்காரனும் பண்ணுனான். அவிங்களை போலிம்பாங்க.
Rate this:
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-ஜூன்-201918:36:44 IST Report Abuse
Ramamoorthy P பெரிய அளவில் இந்து முஸ்லீம் கலவரம் மோடி ஆட்சியின் பொது நடைபெறும் என்று எதிர்பார்த்தார்கள், ஏமாந்தார்கள் . வேறு வழியில்லாமல் சில தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவங்களை பெரிது படுத்த நினைக்கிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X