பொது செய்தி

தமிழ்நாடு

டி.ஆர்.பி. மறுதேர்வு; ஆசிரியர் வாரியம் உறுதி

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : டி.ஆர்.பி தேர்வில் தொழில்நுட்பக் கோளாறால், தேர்வெழுத முடியாதவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.



latest tamil news



ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதுகலை கணினி ஆசிரியர் நிலை -1க்கு, கணினி வழியில் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.


தொழில்நுட்பக்கோளாறு :


முதல்முறையாக கணினி வழியில் நடத்தப்பட்ட இத்தேர்வு, பெரும்பாலான மையங்களில் எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்றது. எனினும் ஒரு சில மையங்களில் ஓரிரு ஆய்வகங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால், சில தேர்வர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news




மறு தேர்வு :


தேர்வு மையத்துக்கு வருகை புரிந்து கணினி தொழில்நுட்பக் கோளாறால் தேர்வில் பங்கேற்காதவர்கள், தேர்வினை நிறைவு செய்யாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும்.


இணையம், மின்னஞ்சல்


எனவே இத்தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அச்சப்படத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விரைவில் தெரிவிக்கப்படும்,'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
23-ஜூன்-201922:53:42 IST Report Abuse
MIRROR ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுகளை நடத்த தகுதியற்ற அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அந்த அமைப்பை கலைப்பதுதான் சரி
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-ஜூன்-201922:32:15 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த இட ஒதுக்கீடு ஆட்கள் மற்றும் ஊழல்திமுக ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அடிமைகளை அதிகாரிகள் என நம்பி இப்போதைய அரசு வாய்ப்பு கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
23-ஜூன்-201920:25:08 IST Report Abuse
Girija இதே கேள்விகளை கேப்பீங்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X