தெ. ஆப்ரிக்காவுக்கு பாக்., 309 இலக்கு

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019
Advertisement

லார்ட்ஸ்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஹாரிஸ் சோகைல், பாபர் ஆஸம் அரைசதம் கடந்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 308 ரன்கள் குவித்தது.






இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி, சோயப் மாலிக் நீக்கப்பட்டு ஹாரிஸ் சோகைல், ஷஹீன் அப்ரிதி சேர்க்கப்பட்டனர். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.






வாசிம் சோபிக்கவில்லை


பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (44), இமாம்-உல்-ஹக் (44) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய பாபர் ஆஸம் (69) அரைசதம் கடந்தார். முகமது ஹபீஸ் (20) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஹாரிஸ் சோகைல், 38 பந்தில் அரைசதமடித்தார். இவர், 89 ரன்னில் ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் (23) சோபிக்கவில்லை. வகாப் ரியாஸ் (4) ஏமாற்றினார்.பாகிஸ்தான் அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது. ஷதாப் கான் (1), கேப்டன் சர்பராஸ் அகமது (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் லுங்கிடி 3 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X