இந்தியாவில் 39 சதவீதம் மழை பொழிவு குறைவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 39 சதவீதம் மழை பொழிவு குறைவு

Updated : ஜூன் 23, 2019 | Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு (2019) 39 சதவீதம் அளவிற்கு மழை பொழிவு குறைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: உலகம் முழுவதும் பருவமழை மற்றும் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தியாவில்

புதுடில்லி: கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு (2019) 39 சதவீதம் அளவிற்கு மழை பொழிவு குறைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: உலகம் முழுவதும் பருவமழை மற்றும் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.


latest tamil news



இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வரை107.1மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. பெய்த மழையின் அளவை காட்டிலும் இந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 39 சதவீதம் அளவிற்கு மழை அளவு குறைந்து 65 மில்லி மீட்டர் அளவில் உள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளிலும் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X