சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜூன் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இது உங்கள் இடம்

திருந்துங்கள் ஊழல்வாதிகளே!

எஸ்.இளங்கோ, பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
தமிழகத்தில், எதுவும் நடக்காதது போல், முதல்வரும், அமைச்சர்களும் பேசுகின்றனர். அவர்களின் வீடுகளில், பொதுப் பணித் துறையினர் சார்பில், நீர் நிரப்பி கொள்கின்றனர். அவர்களுக்கு, தமிழர்களை பற்றி என்ன கவலை!
தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை நினைவுபடுத்தும், கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான, 'தண்ணீர் தண்ணீர்' படம் தான், மீண்டும் திரையிட வேண்டும். அந்தளவிற்கு தமிழகம் தண்ணீரின்றி, குடிக்க, கை, கால் கழுவக் கூடத் தண்ணீர் இன்றி தத்தளிக்கிறது. அதிலும், சென்னை நகர மக்கள் படும் வேதனை, சொல்ல முடியவில்லை!
நகரங்களிலும், கிராமங்களிலும் அரசு, ஆழ்துளை கிணறு அமைக்கலாம். செங்கல்பட்டு, கொளவாய் ஏரி நீரைப் பயன்படுத்தலாம். வட மாநிலங்களில் இருந்தும், நெய்வேலி சுரங்கங்களில் இருந்தும், ரயிலில் தண்ணீர் கொண்டு வரலாம்.பொதுப்பணித் துறை லாரி போக, தனியார் லாரிகளை வாடகைக்கு அமர்த்தி தண்ணீர் எடுத்து வரலாம். ஆனால், அதற்கெல்லாம் அரசுக்கு நேரம் இல்லை.தண்ணீர் இல்லாமல், ஓட்டலில் சாப்பாடு கிடையாது. மேன்ஷனைக் காலி செய்யும்படி சொல்லி விட்டனர். வறண்ட நாக்குக்கு, தண்ணீர் இல்லை. கல்குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது என்ற செய்தி வருகிறது. அந்த தண்ணீர் லட்சணம் பற்றி, சென்னை அருகே உள்ள திருநீர்மலை, பெரும்பாக்கம் மக்களுக்குத் தான் தெரியும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தண்ணீர் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்ற போராட்டம் போன்ற, கிளர்ச்சி, தண்ணீருக்காக நடைபெற வேண்டும்.கிராம மக்கள் பல, கி.மீ., தொலைவு சென்று, ஓரிரு குடம் நீர் கொண்டு வருகின்றனர். ஏரி, குளங்களை பராமரிக்க ஒதுக்கிய தொகை, என்னாயிற்று? துார் வாரவும் இல்லை. குளம், குட்டை இருந்த இடமே தெரியாது விற்று விட்டனர், பொதுப் பணித்துறையினர். அதற்கு மின் இணைப்பு கொடுத்து, மின்சாரத் துறையினர் பணம் பார்த்து விட்டனர்.அரசு அலுவலர்களே, அரசியல்வாதியுடன் கைகோர்த்து, மக்கள் தலையில், மண் அள்ளிப் போட்டு விட்டனர். வறண்டு கிடக்கும் நீர்நிலைகளைச் செப்பனிட மாட்டார்கள். மழைக் காலத்தில், பராமரிப்பு நிதி என, ஏரி, குளங்களுக்கு ஒதுக்கி, அப்பணத்தை வாயில் அள்ளிப் போட்டுக் கொள்வர். 'கையூட்டு' பெறும் அரசு
அலுவலர்கள் திருந்தினால் நாடு திருந்தும்!

வல்லரசு நாடாகமாற்றி காட்டுவார்பிரதமர் மோடி!

மருத்துவர் ராஜேந்திரன் சேகர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, 2014ல், பிரதமர், மோடி தலைமையில், மத்தியில் ஆட்சிக்கு வந்தது.அப்போது, இந்த கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், 52 எம்.பி.,க்களே இருந்தனர். அதிலும், பா.ஜ.,விற்கு, -43 பேர் மட்டுமே இருந்தனர்.
ராஜ்யசபாவின், 245 என்ற மொத்த பலத்தில், 25 சதவீதம் கூட, பா.ஜ.,விடம் இல்லை.
புதிய சட்டங்களை இயற்றும் போது, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ்,
சமாஜ்வாதி உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், பிரதமர் மோடிக்கும் இருந்தது,
ஐந்து ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்ட, மாநிலங்களில், ஆட்சியை பிடித்ததால், பா.ஜ.,வின், மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்தது. 2014ல், 68 உறுப்பினர்களுடன், தனிப்பெரும் கட்சியாக விளங்கிய, காங்கிரசின் எண்ணிக்கை, 48 ஆக குறைந்தது.
ஆனால், 2019ல், பிரதமர், மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவி ஏற்கும் போது, 108 ராஜ்யசபா இடங்கள் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வசம்உள்ளன.

உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற உள்ள, 80 ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தலில்,
பா.ஜ., கூட்டணியின் பலம், 10 முதல், 15 கூடுதலாக கிடைக்கும். 2020 ஆண்டு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி, 123 எனும் பெரும்பான்மை எண்ணிக்கையை தொட்டு விடும்.
தற்போது, ராஜ்யசபா பெரும்பான்மைக்கு, 15 உறுப்பினர்களே தேவை. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திர, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், தெலுங்கானா, டி.ஆர்.எஸ்., ஆகிய மூன்று கட்சிகளின்
ஆதரவு இருந்தாலே போதும்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே, தற்போதைய நிலையில் ராஜ்யசபாவில், புதிய மசோதாகளை நிறைவேற்றி விடலாம்.
கடந்த காலங்களில், ராஜ்ய சபாவில் போதிய பலம் இல்லாததால், நதி நீர் இணைப்பு போன்ற பல முக்கிய திட்டங்கள், நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போயின.
அதேபோல், முத்தலாக் தடை சட்டத்தை, மோடியால், ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாவது முறையாக பிரதமராகி இருக்கும், மோடியின் ஆட்சியில், எந்த
தடுமாற்றமும் இல்லை.நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி, நாட்டை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவார், மோடி!

பாதுகாப்புகவசமின்றிஉயிரை விடாதீர்!

ப.தே.கோகுலாச்சாரி, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: கழிவு நீரில்,ஹைட்ரஜன், சல்பைட், அம்மோனியா, மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஈஸ்டர்கள், சல்பர் டையாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற விஷ வாயுக்கள் உள்ளன. இவை, மனிதரின் நுகர்வு சக்தியால், அறிய முடியாதவை.
பாதுகாப்பு கவசமின்றி, கழிவுநீர் தொட்டி, பாழடைந்த கிணறு போன்றவற்றில் இறங்கி, சுத்தம் செய்ய சிலர், முயற்சிக்கின்றனர். இதனால், விஷ வாயு தாக்கி, இறப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்த வாயுக்களை நுகர்ந்த, அடுத்த சில நொடிகளில், உணர்வு நரம்புகள் செயல் இழந்து விடும். அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் முன், இதற்கென பயிற்சி பெற்றவரை பயன்படுத்த வேண்டும்.
தொட்டிக்குள் உள்ள காற்றின் தன்மை, வெளிப்புற காற்றின் தன்மைகளை, முறையான கருவிகளால் ஆராய வேண்டும்.
அதை விட்டு விட்டு கற்பூரத்தையும், மெழுகுவர்த்தியையும் கொளுத்தி தொட்டிக்குள் போட்டு, தொட்டிக்குள் விஷ வாயு உள்ளதா என்று பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
சிலர், கழிவு நீர் வாடை தெரியாமல் இருக்க, மது அருந்தி, இறங்குவர்; அவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்வதற்கு முன், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவிப் பெட்டியை, உடன் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனமும், மருத்துவர்களும், தயார் நிலையில் இருக்க வேண்டும்.விஞ்ஞானம் வளராத காலத்தில், நம் முன்னோர், 'உச்சிவேளையில் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தால், பேய் அறைஞ்சிடும்' என்பர்.
அதாவது, உச்சிவேளையில், சூரியக் கதிர்கள் நேராக கிணற்றுக்குள் பாயும் சமயம், கிணற்றுக்கள் இருக்கும் விஷ வாயுக்கள் மனிதரை தாக்கும் அபாயம் உள்ளதை, அன்றே உணர்த்தினர்,
நம் முன்னோர்.பாதுகாப்பு கவசமின்றி, யாரும் கழிவுநீர் சாக்கடையில் இறங்கி,உயிரை விடாதீர்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
24-ஜூன்-201906:49:40 IST Report Abuse
venkat Iyer We are accepting the Mr.Elango views.Tamil Nadu Govt supplying adequate drinking water for required consumption.public should not aware consuming more water avoiding more heat in Summer time.In same kind of Electricity .Rain only resolve this problem.Every public planting one tree in their house.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X